வெறும் 18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத்? அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்!
பிக் பாஸ் போட்டியாளர் கானா வினோத் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உடைக்கும் விதமாக, 18 லட்ச ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 9
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 சீசன்களை கடந்து, தற்போது 9 ஆவது சீசனை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகின்றது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அடுத்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில் தற்போது விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கின்றது.
கடந்த வாரத்தில் டிக்கெட் டூ ஃபினாலே, இந்த வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க் என இறுதி கட்டத்தில் எட்டிவருகின்றது.

ரசிகர்கள் பலரும் கானா வினோத் ஜெயிக்க வாய்ப்பு இருப்பதாக கூறிவந்த நிலையில் அவர் ரூ. 18 லட்சம் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
கானா வினோத்
இந்த சீசனின் டைட்டில் வின்னராக வர அதிக வாய்ப்பு இருந்தும், 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையைத் தவறவிட்டு, வெறும் 18 லட்சத்துடன் அவர் வெளியேறியது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, அவருக்குத் தேவையான வாக்குகள் (Votes) மிகத் தீவிரமாக வந்து கொண்டிருந்த நிலையில், அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது பலருக்கும் புரியாத புதிராக உள்ளது.
கடந்த சில நாட்களாகவே கானா வினோத் ஒருவித பதட்டமான நிலையிலேயே (Anxious State) இருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக வியானா வீட்டிற்குள் வந்ததில் இருந்தே அவருக்குள் சில குழப்பங்களும், தேவையற்ற பதற்றங்களும் ஏற்பட்டுள்ள நிலையில், கானா வினோத் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பள விபரம்
பணப்பெட்டியில் இருந்த 18 லட்சத்தை தவிர, 95 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் கானா வினோத் ஒரு நாளைக்கு ரூ. 29 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டுள்ளது. அதன்படி 95 நாட்களுக்கு மொத்தமாக ரூ. 27 லட்சத்து 55 ஆயிரம் வருகின்றது.
ரூ. 18 லட்சம் மற்றும் ரூ. 27 லட்சம் ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக ரூ. 45 லட்சம் வரும் எனப்படுகிறது. இந்த பண விவரத்தை பார்க்கும் போது அவர் இந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறியது சரியான முடிவு என ஒருசாரார் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |