நவம்பர் 30-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: பணமழையில் நனையப்போகும் ராசிகள்!
ஜோதிட சாஸ்தஜரத்தின் அடிப்படையில், மனம், சிந்தனை மற்றும் உணர்வுகளின் காரணியாகக் கருதப்படுபவர் சந்திர பகவான். இவர் ஒரு ராசியில் சுமார் இரண்டரை நாட்கள் மட்டுமே சஞ்சரிப்பார்.கிரகங்களிலேயே மிக வேகமாக ராசி மாறும் சந்திரன், கடக ராசியின் அதிபதியாக விளங்குகிறார்.
அந்த வகையில், நவம்பர் 30 ஆம் தேதி சந்திரன் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். ஏற்கனவே அங்கு குரு பகவான் சஞ்சரித்து வருவதால், இரு கிரகங்களின் சேர்க்கையால் ஆற்றல் மிக்க கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு செல்வம், பொருளாதார முன்னேற்றம், சமூக அந்தஸ்து மற்றும் வாழ்க்கையில் உயர்வு போன்ற பலன்களை வாரிவழங்கப்போகின்றது.
அப்படி கஜகேசரி ராஜயோகத்தால் வாழ்வில் பல்வேறு வழிகளிலும் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டில் குரு, சந்திரன் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் தன்னம்பிக்கையும் செயல்திறனும் அதிகரிக்கும்.
நீண்ட நாட்களாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நிதி ஆதாயங்களும் புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கலாம்.புதிய வருமான வழிகள் உருவாகுவதுடன், குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்

கடக ராசியின் இரண்டாம் வீட்டில் குரு, சந்திரன் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதுடன், தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.
அலுவலகத்தில் உழைப்புக்கும் செயல்திறனுக்கும் பாராட்டு கிடைக்கும். நிதி நிலை மேம்படுவதுடன், புதிய வருமான வழிகளும் உருவாகும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது.
தனுசு

தனுசு ராசியின் ஒன்பதாம் வீட்டில் குரு, சந்திரன் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் தடைப்பட்ட வேலைகளும் திட்டங்களும் மீண்டும் வேகமெடுக்கும்.
பணியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்படலாம்.
நிதி நிலை வலுப்பெற்று, எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில், மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றியும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |