ஜேடன் ஸ்மித்துடன் இணைத்துப் பேசப்படும் 82 வயது பெண் யார்? வைரலாகும் புகைப்படங்கள்
Jaden Smith, 28, Linked to 82-Year-Old Fashion Designer photos viral : கடந்த சில நாட்களாக, பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் மகனும் நடிகருமான ஜேடன் ஸ்மித், 82 வயதான பிரபல பிரெஞ்சு ஃபேஷன் டிசைனர் மிச்செல் லேமியுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இருவரும் கைகோர்த்துச் செல்வது, முத்தமிட்டுக் கொள்வது மற்றும் ஒன்றாகச் செல்ஃபி எடுத்துக் கொள்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இருவரும் காதலிப்பதாகவும், நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

அதுமட்டுமன்றி, மிச்செல் தனது ரியல் எஸ்டேட் சொத்துகளில் 80 சதவீதத்தை ஜேடனுக்கு வழங்க முன்வந்துள்ளதாகவும் ABC 10 News செய்தியை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
யார் இந்த ஜேடன் ஸ்மித்?
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மற்றும் நடிகை ஜாடா பிங்கெட் ஸ்மித் ஆகியோரின் மகன்தான் ஜேடன் ஸ்மித். சிறு வயதிலேயே திரையுலகில் அறிமுகமான இவர், 2006ஆம் ஆண்டு வெளியான 'The Pursuit of Happyness' திரைப்படத்தில் தனது தந்தையுடன் இணைந்து நடித்தார்.
தொடர்ந்து, ஜாக்கி சானுடன் இணைந்து நடித்த 'The Karate Kid' திரைப்படம் மூலம் உலகளவில் பிரபலமானார். பின்னர் 'After Earth' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிப்பு மட்டுமன்றி, வித்தியாசமான ஆடை அலங்காரம் மற்றும் ஃபேஷன் ஆர்வத்திற்காகவும் இவர் அறியப்படுகிறார். 54 ஆண்டுகள் வயது வித்தியாசம்! தற்போது 28 வயதாகும் ஜேடன் ஸ்மித்துக்கும், 82 வயதான மிச்செல் லேமிக்கும் இடையே சுமார் 54 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளது.
இதனால், இருவருக்கும் இடையே காதல் உறவு இருக்கிறதா என்ற கேள்வி இணையவாசிகள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும், இருவரும் காதலிப்பதாகவோ, நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகவோ அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
மேலும், வைரலாகும் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலிப் படங்கள் எனக் கூறப்படுகிறது.
ஜேடன் ஸ்மித்துடன் இணைத்துப் பேசப்படும் மிச்செல் லேமி, ஏற்கனவே பிரபல ஃபேஷன் டிசைனரான ரிக் ஓவன்ஸை திருமணம் செய்துகொண்டவர். இருவரும் இணைந்து 'Owenscorp' என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

ஆடை வடிவமைப்பு மட்டுமன்றி, பல்வேறு கலைத்துவப் படைப்புகளிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஃபேஷன் துறையில் நீண்டகாலமாகப் பங்களித்து வரும் மிச்செல் லேமி, இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற Fashion Trust US விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார்.
வைரல் புகைப்படங்களின் உண்மை என்ன?
ஜேடன் ஸ்மித் மற்றும் மிச்செல் லேமி காதலிப்பதாகவும், நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகவும் வெளியாகும் தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
அதேவேளை, வைரலாகும் புகைப்படங்கள் AI மூலம் உருவாக்கப்பட்டவை எனக் கூறப்படும் நிலையில், அவற்றை உண்மையானவை எனக் கருதுவதற்கும் ஆதாரங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.