திருமணத்தில் குதூகலமாக இருந்து மணப்பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி.. மணமேடைக்கு விரைந்த உறவினர்கள்!
திருமணத்தில் தீப்பற்றும் துப்பாக்கிகளை வைத்து விளையாடிய மணமகளின் மாலையில் தீப்பரவிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருமண வேடிக்கைகள்
பொதுவாக திருமணங்கள் என்றால் வேடிக்கையான பல விடயங்கள் இடம்பெறும். இதற்கு முக்கிய காரணம் மணமக்களின் நண்பர்களாக இருப்பார்கள்.
திருமணத்தை சிறப்பிப்பதாக கூறி அவர்களின் சேட்டைகளை செய்து கொள்வார்கள். ஆனால் இதனால் சிலரின் உயிருக்கு கூட ஆபத்தாக முடியும்.
அந்த வகையில் மணமக்களின் கைகளில் இரண்டு தீப்பரவல் துப்பாக்கிகளை வைத்து வீடியோக்களுக்காக சூடும் படி கூறியிருக்கிறார்கள்.
மணமகளின் முகத்தை சேதப்படுத்திய துப்பாக்கி
அப்போது துப்பாக்கியிலிருந்து வந்த தீ மணமகளின் மாலையில் பட்டு தீ பரவ ஆரம்பித்துள்ளது.
இதனை தொடர்ந்து மணப்பெண் துப்பாக்கியை வீசி விட்டு தீ அசைக்க தட்டி தட்டி கத்தியுள்ளார். ஆனாலும் பெரியளவில் சேதங்கள் இல்லை.
ஆனால் குறித்த சம்பவம் அந்த இடத்தில் ஒரு பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த இணையவாசிகள், “ இந்த விளையாட்டு திருமணத்தில் தேவையா?” என கமண்ட் செய்து வருகிறார்கள்.
No Sympathy pic.twitter.com/NH5PVBMU78
— ηᎥ†Ꭵղ (@nkk_123) March 31, 2023