மணமகன் வீட்டார் நடத்திய துப்பாக்கி சூடு.. திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! பரபரப்பு சம்பவம்
உத்திரப் பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த நாட்களுக்கு முன்பு இராம் என்ற பெண்ணுக்கும், ஷாசத் என்பவருக்கும் திருமணம் நடக்க இருந்தது. அப்போது, இந்த திருமணத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி மணமகன் வீட்டார் உற்சாகமாக இருந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மணமகளின் மாமாவின் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதனால் மண்டபத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். இதனையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து தனக்கு திருமணம் வேண்டாம் என மணப்பெண் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த குடும்பத்தின் முன்னிலையிலும் மணமகனின் குடும்பத்தினர் இதுபோல் நடந்து கொண்டால், தான் திருமணம் முடிந்து அவர்களின் வீட்டுக்கு சென்று அங்கு தனியாக இருக்கும் நேரத்தில் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? எனக் கேள்வி எழுப்பி திருமணத்தை மணப்பெண் நிறுத்தியுள்ளார்.
மேலும், மணமகள் இப்படி தெரிவித்ததும், கோபத்தில் அவரின் குடும்பத்தினர் மணமகனின் காரை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் மணமகன் மற்றும் அவரது உறவினர்களை அடித்து தாக்கியதுடன் அவர்கள் அனைவரையும் சிறைபிடித்து வைத்திருந்தனர்.
இதனால் திருமண விழா கலவர இடமாக காட்சியளித்தது. இதனைத்தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு வந்த பின்னரே சிறைபிடிக்கப்பட்ட மணமகன் வீட்டார் விடுவிக்கப்பட்டனர்.
இதனால், மணமகளின் மாமாவை துப்பாக்கியால் சுட்டதாக மணமகன் ஷாசத், அவருடைய சகோதரர்கள் பப்பு, சனு ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கை காவல்துறையினர் பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.