பார்ட்டியில் அட்டகாசமாக ஆடி அசத்திய முதிர் காதல் ஜோடி! வைரலாகும் காட்சி
பார்ட்டியில் பாட்டியும் தாத்தாவும் இணைந்து டான்ஸ் ஆடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரல் காட்சி
சமூக வலைத்தளங்கள் என எடுத்து கொண்டால் அதில் நம்மை வியக்க வைக்கும் பல விடயங்கள் போஸ்ட்டுகளாக பகிரப்படுகின்றன.
அதிலும் சிலர் போஸ்ட்களை போடுவதை வாடிக்கையாக செய்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடைந்து விடுகிறார்கள்.
அந்த வகையில் பார்ட்டி ஒன்றில் நடனமாடுவதற்காக ஒரு மூதியவரும் அவருடன் இணைந்து ஆடுவதற்கு ஒரு பாட்டியும் வருகிறார்கள்.
சிறிது நேரம் சென்றதும் அவர்கள் நடன ஸ்டெப்களை பார்த்து அங்கிருந்தவர்கள் ஆரவாரப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
வியக்க வைத்த சில விநாடிகள்
இருவரும் தங்களின் வயதையும் உடல் நிலையும் மறந்து இளம் வயது ஜோடிகள் போல் கலக்கியுள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த காட்சி டுவிட்டர் பக்கத்தில் ஆயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் இதனை பார்த்த இணையவாசிகள்,“ வயதான காலத்தில் இப்படியென்றால் இளம் வயதில் எப்படி ஆடுவார்கள். ” என தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
It’s Friday! ? pic.twitter.com/LQd2XA7t1J
— Buitengebieden (@buitengebieden) June 2, 2023