திருமண பார்ட்டியில் அரங்கேறிய நடனம்! வெளியே நின்ற டெலிவரி பாய் செய்த காரியம்
திருமண நிகழ்வு பார்ட்டியில் போடப்பட்ட பாடலுக்கு வெளியே நின்று உணவு டெலிவரி செய்யும் நபர் நடனமாடியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
டெலிவரி செய்யும் நபரின் செயல்
திருமண நிகழ்வில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் 1998ம் ஆண்டு வெளியான சத்யா என்ற திரைப்படத்தில் லதா மங்கேஷ்கர் மற்றும் சுரேஷ் வாட்கர் பாடிய சப்னே மே மில்டி ஹை என்ற பாடல் ஒலிக்க நடனமாடியுள்ளனர்.
இதனை வெளியே நின்று பார்த்த உணவு டெலிவரி செய்யும் நபர், அதற்கேற்ப நடனமாடி அசத்தியுள்ளார். குறித்த காட்சியினை பல ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ள நிலையில், இதனை புல்கிட் கோச்சார் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
பகிர்ந்து இசைக்கும் நடனத்திற்கும் தடைகள் இல்லை என்று கேப்சன் கொடுக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியிலிருந்த ஒருவர், அந்த டெலிவரி பாயை இரவு உணவிற்கு அழைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.