குழந்தையை வணங்கியப்படி சாப்பாட்டை பிடுங்கிய மான்! அசந்து நிற்கும் இணையவாசிகள்
குழந்தையை வணங்கியபடி சாப்பாட்டை பிடுங்கிய மானின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் போது தினமும் ஒரு வீடியோக்காட்சி வைரலாவது வழமை. அந்த வகையில், வீதியில் ஓரமாக மான் ஒன்று நின்றுக் கொண்டிருக்கின்றது.
அப்போது அந்த வழியாக வந்த சிறுமியொருவர் மானிற்கு உணவு கொடுக்க ஆசைப்படுகிறார். அவர் கையிலுள்ள ஏதோவொன்றை மானை வணங்கியப்படி கொடுக்கிறார்.
அதனை அந்த மானும் குழந்தையை வணங்கியப்படி சாப்பாட்டை வாங்கி கொள்கிறது.
இந்த நிலையில் உணவை கொடுத்த சிறுமி மீண்டும் மானை பார்த்து வணங்குகிறது. மானும் வணங்கியப்படி சாப்பிடுகிறது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள், “ மானிற்கு கூடவா கலாச்சாரம் தெரியும்...” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
Lovely? pic.twitter.com/2QvgLVZlZo
— Tansu YEĞEN (@TansuYegen) August 10, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |