viral video: பைலோபோலஸ் பூஞ்சைகள் வளர்வதை பார்த்ததுண்டா? மெய்சிலிர்க்கும் close up காட்சி!
பைலோபோலஸ் பூஞ்சைகள் இயற்கையாக வளர்வதை காட்டும் close up காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பைலோபோலஸ் பூஞ்சைகள் சிறியதாக இருக்கலாம், ஆனால் அவை தங்கள் வித்துகளைப் பரப்புவதற்கு நம்பமுடியாத வழியைக் கொண்டுள்ளன. "பூஞ்சை" என்ற சொல் லத்தீன் மொழி வழிவந்த சொல்லாகும்.
இதற்கு ‘காளான்’ என்று பொருள். பூஞ்சைகள் எங்கும் பரவிக் காணப்படுகின்ற, மெய்யுட்கரு கொண்ட பச்சையமற்ற, பிறசார்பூட்ட உயிரிகளாகும். இவை ஒரு செல் அல்லது பல செல்களால் ஆனவை. பூஞ்சைகள் பொதுவாகக் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும்.
எனினும் காளான்களாக இவை விருத்தியடையும் போது கண்ணுக்குத் தென்படுகின்றன. ஏனைய நுண்ணியிர்கள் போலவே இவற்றிலும் மனிதர்களுக்குப் பயனுடையவை, பயனற்றவை, தீமையானவை என பல வகைகள் அறியப்படுகின்றது.
சில மில்லிமீட்டர் உயரம் மட்டுமே கொண்ட அவை, சூரியனைக் கண்காணிக்க ஒளிச்சேர்க்கை செல்களைப் பயன்படுத்துகின்றன.
அப்படி இயற்கையின் விந்தையை பறைசாற்றும் இந்த பைலோபோலஸ் பூஞ்சைகள் எப்படி அழுத்ததை பிரையோகித்து வளர்ச்சியடைகின்றன என்பதை காட்டும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வெளியாகி, பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |