உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கிழிந்த ஷு: இதன் விலை 1.44 லட்சமாம்
முன்னணி ஷு தயாரிப்பு நிறுவனமான Balenciaga, கிழிந்த ஷுக்களை ஆஃபரில் விற்கப்போவதாக அறிவித்துள்ள தகவல் தற்போது தீயாய் பரவி வருகின்றது.
பிரபல ஷூ நிறுவனம்
முன்னொரு காலத்தில் மேற்க்கத்திய நாடுகளில் ஷூ அணிவது அவர்களின் பண்பாட்டு அடையாளமாக கருத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உலக மக்கள் ஷு அணியும் பழக்கத்திற்கு வந்துவிட்டனர்.
அந்த வகையில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மாதிரியான உடைகள், ஆடை அணிகலன்கள், காலணிகளை மனிதர்கள் பயன்படுத்திவருக்கின்றனர்.
இந்நிலையில் ஸ்பெயினை சேர்ந்த ஒரு ஆடை அலங்கார பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் புதிய ஆஃபர் ஒன்றினை அறிவித்துள்ளது.
நித்தியானந்தாவின் பரிதாப நிலைக்கு காரணம் என்ன? அவிழ்ந்த கைலாசாவின் பல உண்மைகள்
முழுவதும் சேதமடைந்த ஷூ
ஸ்பெயினை சேர்ந்த டிசைனரான கிறிஸ்டபோல் பெலன்சியாகா என்பவரால் துவங்கப்பட்ட பெலன்சியாகா ஆடை அலங்கார பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் தனது தனித்துவமான அணிகலன்களுக்கு பெயர் போனது.
இந்த நிறுவனம் தற்போது 'முழுவதும் சேதமடைந்த ஷூ' என்னும் வகையில் பிரத்யேக 100 ஜோடி ஷூக்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.
பெயருக்கு ஏற்றாற்போல, முழுவதும் கிழிந்து, ஆங்காங்கே பிளவுபட்டு இருக்கும் இந்த ஷூக்கள் தரத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதாவது அதிகமாக கிழிந்திருந்தால் கூடுதல் விலையாம்.
495 அமெரிக்க டாலர்கள் துவங்கி 1,850 டாலர்கள் (இந்திய மதிப்பில் 1.44 லட்சம் ரூபாய்) வரையில் இந்த கிழிந்த ஷூக்கள் விற்கப்பட்டு வருகின்றன.
பாரிஸ் ஸ்னீக்கர் கலெக்ஷன்ஸ் (Paris Sneaker collection) என்னும் தலைப்பில் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஷூக்களில் இரண்டு மாடல்கள் மட்டுமே இருக்கிறதாம்.
பெலன்சியாகாவின் இந்த புதிய முழுவதும் சேதமடைந்த ஷூ மாடல் ஃபேஷன் உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.
படுக்கையறையில் இந்த பொருட்களை மட்டும் வைக்காதீங்க! புற்றுநோய் ஏற்படும் ஜாக்கிரதை