நித்தியானந்தாவின் பரிதாப நிலைக்கு காரணம் என்ன? அவிழ்ந்த கைலாசாவின் பல உண்மைகள்
உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் எலும்பும் தோலுமாக இருக்கும் நித்தியானந்தாவின் இந்த நிலைக்கு உண்மை காரணம் என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது.
நித்தியானந்தா
தமிழ்நாட்டில் சர்ச்சைக்கு பிரபலமான நித்தியானந்தாவின் மீது சிறுமி கடத்தல், பாலியல் புகார்கள் என இருக்கும் நிலையில் சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருகின்றார்.
இந்தியாவிலிருந்து தப்பித்த இவர் தீவு ஒன்றினை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா நாடு என்று பெயரிட்டு காணொளி மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
படுக்கையறையில் இந்த பொருட்களை மட்டும் வைக்காதீங்க! புற்றுநோய் ஏற்படும் ஜாக்கிரதை
தற்போது நித்தியானந்தாவின் சமீபத்திய புகைப்படம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம் எலும்பும் தோலுமாக இருக்கும் நிலையில், அவருக்கு 27 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், எந்த நோயின் தாக்கம் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நித்தியானந்தா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
உணவு உண்ண முடியாமலும், தூங்க முடியாமலும் தவித்து வரும் நித்தியானந்தா தான் இன்னும் சாகவில்லை... மீண்டும் திரும்ப வருவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
நித்தியானந்தா இறந்துவிட்டாரா? எலும்பும் தோலுமாக வெளியான புகைப்படம்! உண்மை நிலை என்ன?
கைலாசாவில் ஏற்பட்ட பஞ்சம்
இந்தியா மட்டுமின்றி உலகம் எங்கும் பல கிளைகளை வைத்திருக்கும் நித்தியானந்தாவிற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை வைத்து வாழ்ந்து கொள்ளலாம் என்ற நோக்கில் கைலாசா நாடு ஒன்றினை அறிவித்து வாழ்ந்து வருகின்றார்.
ஆனால் இவரது குற்றங்கள் வெளிநாடுகளிலும் தெரியவரவே அங்கிருந்து வரும் வருமானம் குறைந்ததோடு, இடையே கொரோனா தாக்கத்தினால் பல இடங்களில் தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டதால் கைலாசா பஞ்சத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது.
இன்றைய ராசிபலன்! தொட்டதெல்லாம் பேரதிர்ஷ்டமாக மாறும் தருணம்
முறையான இந்திய உணவு பொருட்கள் கிடைக்காமல் போனதாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும் கைலாசாவில் பஞ்சம் தலைவிரித்தாடுவதாக சமீபத்தில் அங்கிருந்து தப்பித்துவந்த ஒரு சீடர் தெரிவித்திருந்தார்.
இதனை உண்மையென அறிவிக்கும் நிலையில், தற்போது நித்தியானந்தாவின் புகைப்படமும் வெளியாகி அதிர வைத்துள்ளது.
நித்தியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் சிகிச்சைக்காக இந்தியா வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், இவரை கலாய்த்து வந்த நெட்டிசன்கள் தற்போது நலம்பெற வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.