மாம்பழங்களை பழுக்க வைக்கும் வாயு ஆபத்தானது.. எச்சரிக்கை விடுத்த FSSAI
பொதுவாக பழங்கள் சீசன் வந்து விட்டால் அந்த பழங்கள் சந்தையில் அதிகம் காணப்படும். இந்த பழங்கள் அளவிற்கு அதிகமாக விளையும்.
இது போன்ற நேரங்களில் பழங்களை பழுக்க வைப்பதற்காக சில மருந்துக்களை தெளிப்பார்கள். இப்படி பயன்படுத்தும் மருந்துகள் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை எச்சரிக்கும் விதமாக FSSAI ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான பூரண விளக்கத்தை தொடர்ந்து பதிவில் காணலாம்.
FSSAI எச்சரிக்கை
தற்போது மாம்பழங்களை சந்தையில் அதிகமாக காணலாம். ஏனென்றால் மாம்பழங்கள் சீசன் வந்து விட்டது.
இந்த பழங்களை மஞ்சளாக இருப்பதற்கும், விரைவில் பழமாக மாற்றுவதற்காகவும் கால்சியம் கார்பைடு பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து வெளியாகும் கால்சியம் கார்பைடு அசிட்டிலின் வாயு ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றை சிறிதளவு விட்டு செல்கிறது. இதனால் மனிதர்களுக்கு ஆபத்து உடல்நிலை கோளாறுகள் ஏற்படுகின்றன.
இதனை கட்டுபடுத்துவதற்காக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (Food Safety and Standards Authority of India - FSSAI)ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது, “ மாம்பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு பயன்படுத்தக் கூடாது. இதற்கு பதிலாக எத்திலின் வாயுவை பயன்படுத்தலாம். எத்திலின் வாயுவால் எந்தவிதமான உடல்நிலை கோளாறுகளும் வராது. மாறாக எத்திலின் வாயு பழங்கள் இயற்கையாக பழுப்பதற்கான சூழலை ஒழுங்கு செய்து கொடுக்கிறது.
எச்சரிக்கை மீறி செயற்படுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கபடும்.” என கடுமையாக தெரிவித்துள்ளது.
மேலும் கால்சியம் கார்பைடு பாவணையால் மனிதர்களுக்கு மயக்கம், தொடர்ச்சியான தாகம், எரிச்சல், விழுங்குவதில் சிக்கல், வாந்தி, தோல் அல்சர், உடல் வலுவிழந்து காணப்படுதல் உள்ளிட்ட நோய்கள் வரலாம் என கூறப்படுகிறது.
இந்த தகவலை மாம்பழ சீசன் ஆரம்பித்துள்ளமையினால் FSSAI வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்பு
பயிர், வகை மற்றும் முதிர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் 100 ppm (100 μl/L) வரை எத்திலின் வாயு பயன்படுத்தலாம்.