குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சிறுதானிய சிவப்பு சோள கார பனியாரம்
பொதுவாக வீடுகளில் இருக்கும் சிறுவர்கள் பெரிதாக உணவை விரும்பமாட்டார்கள்.
மாறாக கடைகளில் செய்யப்படும் உணவுகள், ஸ்நாக்ஸ் என்பவற்றை தான் விரும்பி உண்பார்கள்.
இப்படி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இலகுவாக சாப்பிட வைக்கும் வகையிலும் அதில், ஆரோக்கியம் நிறைந்திருப்பது போன்றும் உள்ள உணவுகளை கொடுக்க வேண்டும்.
பார்ப்பதற்கு கவரும் நிறந்திலும், ஆரோக்கியத்தை பதுக்கி வைத்திருக்கும் தானியங்களில் உணவு செய்து கொடுப்பது நல்லது.
அந்த வகையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சிறுதானிய சிவப்பு சோள கார பனியாரம் எப்படி செய்வது என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சிவப்பு சோளம்-2 கப்
- அரிசி-அரை கப்
- வெந்தயம்- ஒரு ஸ்பூன்
- கடுகு- கால் டீஸ்பூன்
- உளுந்து- கால்கப்
- பச்சைமிளகாய்- 2
- கறிவேப்பிலை- தாளிக்க தேவையானளவு
- தேங்காய்- துருவல் ஒரு கப்
- பெருங்காயம்- ஒரு சிட்டிகை
பணியாரம் செய்முறை
முதலில் அரிசி, சோளம், உளுந்து என்பவற்றை சம அளவில் எடுத்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
பின்னர் இவை மூன்றுடன் வெந்தயம் கொஞ்சம் போட்டு மிக்ஸியில் அரைக்கவும். இந்த கலவையை சரியாக உப்பு சேர்த்து சுமாராக 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
இதனை தொடர்ந்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில், எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதங்கி எடுக்கவும்.
அரைத்து வைத்துள்ள மாவுடன் தாளிப்பை கலந்து கிளறி விட்டு, குழிப்பனியாரக்கல்லில் எண்ணெய் விட்டு ஒவ்வொன்றாக ஊற்றி இறக்கினால் சுவையான சிவப்ப சோள குழிப்பனியாரம் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |