சர்க்கரை நோயாளிகளுக்காகவே ஒதுக்கப்பட்ட சில பழங்கள்! இனி கவலை வேண்டாம்
பொதுவாக சக்கரை நோயாளர்கள் எந்த உணவை சாப்பிட்டாலும் சக்கரையின் அளவு அதிகரித்து விடும் என்ற பயம் இருக்கும்.
மேலும் கவனமின்றி சில உணவுகளை எடுத்து விட்டால் பின்னர் அவரின் உயிருக்கு கூட ஆபத்தாகி விடும்.
இதனால் சக்கரை நோயுள்ளவர்கள் பழங்கள், இனிப்பு வகைகள், பண்டிகையில் செய்யும் பலகாரங்கள் என எதையும் சாப்பிடமாட்டார்கள்.
ஆனால் சில நோயாளர்களுக்கு மருத்துவர்கள் பருந்துரைப்பார்கள் இது போன்ற பழங்கள் எடுத்து கொள்ளலாம் என்று, அப்போது என்ன பழங்கள் எடுத்து கொள்வது என சந்தேகம் இருக்கும்.
அந்த வகையில் சக்கரை நோயாளர்கள் என்ன வகையான பழங்களை எடுத்து கொள்வது என தொடர்ந்து தெளிவாக பார்க்கலாம்.
சக்கரை நோயாளர்களுக்கு நன்மை சேர்க்கும் பழங்கள்
1. கிவி
கிவி பழத்தை சக்கரை நோயாளர்கள் எடுத்து கொள்ளலாம். ஏனெனின் இந்த பழம் இரத்ததிலுள்ள சக்கரையின் அளவை கட்டுபடுத்த உதவியாக இருக்கிறது.
2. செர்ரி
செர்ரி பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸின் அளவு 20 அல்லது தற்கும் குறைவாக தான் இருக்கும். இதனால் சக்கரை நோயாளர்களுக்கு எந்த விதமான ஆபத்தையும் ஏற்படுத்தாது. இதனால் இந்த பழத்தை அளவிற்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. ஆதலால் ஒரு குறிப்பிட்ட அளவில் தான் சாப்பிட வேண்டும்.
3. கொய்யா
கொய்யாவில் ஏகப்பட்ட ஊட்டசத்துக்கள் நிரம்பியிருப்பதால், உடலுக்கு ஆரோக்கியத்தை ஏராளமாக தருகிறது. மேலும் கொய்யாவில் வைட்டமின் ஏ அதிகமாகவும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் இருக்கிறது. இதனால் சக்கரை நோயாளர்கள் எடுத்து கொள்ளலாம்.
4. நாவல் பழம்
சக்கரை நோயாளர்களின் இரத்தத்திலிருக்கும் சக்கரையின் அளவு அதிகரிக்கும் போது , இந்த பழத்தை சாப்பிட்டால் உடனடியாக சக்கரையின் அளவு கட்டுபாட்டிலிருக்கும். ஆகையால் கிராமப்புற மக்கள் அதிகமாக எடுத்துக் கொள்வார்கள்.
5. பீச்
இந்த பழம் மிகவும் சுவையாக இருக்கும் மேலும் சக்கரை நோயாளர்களை தாக்கும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக தான் இருக்கிறது. இதனால் பயமின்றி சக்கரை நோயாளர்கள் இந்த பழத்தை எடுத்து கொள்ளலாம்.