நீரிழிவு நோயாளர்களின் சக்கரையின் அளவு குறைந்து விட்டதா? உடனடியாக செய்ய வேண்டியது இதுதான்
பொதுவாக சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தத்தில் சக்கரையின் அளவு அதிகரிப்பதை விட குறைவதே மிகவும் ஆபத்தை விளைவிக்கும்.
சக்கரையில் நோயால் பாதிக்கப்படவர்கள் குறிப்பிட்ட சில உணவுகளை உட்கொள்ளுவதால் இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவு அதிகரிக்கும். இதனால் ஏற்படும் பாதிப்பு குறைவானதாக இருக்கும்.
குறிப்பிட்ட சிலருக்கு குறையும் போது தலைசு்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் காட்டும் இதன் போது மருத்துவரை நாட வேண்டும். இல்லையென்றால் மரணம் கூட ஏற்படலாம்.
அந்த வகையில் சக்கரையின் அளவு திடீர் என குறையும் போது என்ன செய்யலாம் என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
image -medlineplus
சக்கரையின் அளவு குறையும் போது உடனடியாக செய்ய வேண்டியது
உடலில் சக்கரையின் அளவு சாப்பிடாமல் இருத்தல் மற்றும் இன்சுலின்களை முறையாக எடுத்துக் கொள்ளாவிட்டால் சக்கரையின் அளவு நினைத்து பார்க்க முடியாத அளவு குறையும்.
இவ்வாறு குறையும் போது சாக்லேட், இனிப்பு மிட்டாய்கள் அல்லது சினிப்பு கலந்த ஜீஸ் அருந்தினால் உடனடியாக சக்கரையின் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
காலையுணவு என்பது எல்லோருக்கும் முக்கியமானதொன்றாகும். இவ்வாறு சாப்பிடாமல் இருக்கும் போது, சக்கரையின் அளவு குறைவதாக இருந்தால் முட்டை, சீஸ், சிக்கன் போன்ற புரோட்டின் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சக்கரையின் அளவு குறைந்து மயக்கத்திலிருக்கும் நோயாருக்கு சீனியை தண்ணீரில் கலந்து சிறிது சிறிதாக குடிக்க கொடுக்க வேண்டும்.
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன்ஸ் மாற்றங்களினால் உடலில் இருக்கும் சக்கரையின் அளவு அதிகரிப்பு அல்லது குறைப்பு ஏற்படும். இது போன்ற நேரங்களில் குளுக்கோஸ் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது சக்கரையின் அளவு மேம்படுத்தப்படும்.