ஃப்ரூட் லஸ்ஸி சாப்பிட்டதுண்டா...நாவில் எச்சில் ஊறுமாம்
தற்போது கோடைக்காலம் என்பதால் உடல் உஷ்ணம் சற்று அதிகமாகக் காணப்படுகிறது. அதனால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறைந்து அது பல பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் சற்று குளிர்ச்சியாக எதையாவது உட்கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும். அதுவும் ஆரோக்கியமாக இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
அந்த வகையில் பழங்களினால் செய்யும் ஃப்ரூட் லஸ்ஸி எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
image - cookpad.com
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் - 1
அப்பிள் - 1
ஒரேஞ்ச் - 1
ஸ்ட்ரோபெர்ரி - 4
சர்க்கரை - 1 கப்
உலர் திராட்சை - 10
புளிக்காத தயிர் - 2 கப்
பாதாம், முந்திரி, பிஸ்தா - தேவையான அளவு
image - My healthy breakfast
செய்முறை
முதலில் அப்பிள், வாழைப்பழம், ஸ்ட்ரோபெர்ரி என்பவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் பாதாம், பிஸ்தா, முந்திரி என்பவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பின்னர் ஒரேஞ்ச் பழத்தின் விதைகளை நீக்கிக்கொள்ள வேண்டும்.
அதற்கடுத்ததாக, ஒரு பாத்திரத்தில் அனைத்து பழங்களையும் போட்டு உலர் திராட்சையையும் சேர்த்து கலந்து வைக்கவும்.
அதன்பின்னர் அதனுடன் தயிர் சேர்த்து கலந்து மிக்ஸியில் சுற்றி எடுக்கவும்.
தயாரான கலவையை ஒரு கண்ணாடி க்ளாஸில் ஊற்றி மேலே பாதாம், முந்திரி, பிஸ்தா என்பவற்றை தூவி பரிமாறவும்.
image - You tube