உங்களுக்கு அடிக்கடி வயிறு வீங்கிக் கொண்டிருக்கிறதா? இந்த நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்
இப்போதெல்லாம் நோய்க்கு பஞ்சம் இல்லாத அளவிற்கு புதுப்புது நோய்கள் வந்துக் கொண்டு தான் இருக்கிறது. அதுபோல ஒரு சிலருக்கு அடிக்கடி வயிறு வீங்கியது போலத்தான் இருக்கும் இதனை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
உங்கள் வயிறு வழக்கத்திற்கு மாறாக பெரிதாக இருந்தால் அது உங்களுக்கு ஆபத்துக்களை விளைவிக்க கூடியது. வயிறு வீங்குவதற்கு அஜீரணம், வாயு தொல்லை, குடல் புண், கர்ப்பம், அதிகமாக சாப்பிடுவது போன்ற காரணங்கள் இருந்தாலும், வயிறு வீக்கமாக இருக்கும்.
அடி வயிற்று வீக்கத்திற்கான காரணம்
குடல் எரிச்சல் அல்லது குடல் புண் ஏற்பட்டால் அடிவயிற்றில் வீக்கம் ஏற்படும். இது அதிக வலியை ஏற்படுத்தும் மேலும், அஜீரணப் பிரச்சினை, வாயு மற்றும் வயிற்றில் மூச்சுப் பிடிப்பு, தசைப் பிடிப்புகள் ஏற்படும்.
அடிவயிற்றில் திரவம் குவிவது தான் ஆஸ்கைட்ஸ் எனப்படும். இந்தப் பாதிப்பால் கல்லீரல் நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய் மற்றும் இதய செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கும்.
நம்மில் சிலருக்கு பால் பொருட்கள் சாப்பிட்டால் வயிறு பாரமாக இருக்கும். பாலில் இருக்கும் லக்டோஸ் சக்கரையை எமது உடலால் ஜீரணிக்க முடியாது இதனால் அஜீரணம், வாயு, வயிற்று வலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
பித்தப்பையில் கல் இருந்தாலும் அடிவயிற்றில் வீக்கம் ஏற்படும். மேலும், குடலில் பக்ரீரியாக்களின் வளர்ச்சி அதிகம் இருந்தாலும் வீக்கம் ஏற்படும்.
போத்தல்களில் விற்கப்படும் பானங்களை அருந்துவதால், தைராய்டு குறைப்பாடு, எரிச்சல் கொண்ட குடல் நோய், உணவுகளை மென்று உண்ணாமல் இருக்கப்பது போன்ற பிரச்சிகனைகளாலும் வயிற்றில் வீக்கம் இருக்கும்.