உதடுகள் வீங்கிய மாடல் அழகியின் பரிதாப நிலை!
அனைவருக்குமே தாம் அழகாக இருக்கவேண்டும் என்பதே ஆசை. அதற்காக அதிகமாக கஷ்டப்படுவார்கள். அதிலும் குறிப்பாக மொடல் அழகிகளை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு அழகு மிகவும் முக்கியமானது.
இருப்பினும் தாம் செய்துகொள்ளும் சத்திர சிகிச்சைகள் தமக்கு எந்தளவு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும்.
ஜெசிக்கா புர்கோ எனப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் அழகி தனது உதட்டை அழகாக்குவதற்காக லிப் பில்லர் எனும் சிகிச்சையை எடுத்து வந்துள்ளார். இந்த சிகிச்சையை அவர் 6 தடவைகள் செய்துள்ளார்.
இந்நிலையில் தற்போது மார்கெட்டில் புதிய லிப் பில்லர் வந்துள்ளதாகவும் அதை அவருக்கு இலவசமாக தருவதாகவும் மருத்துவர் கூறியுள்ள நிலையில், ஆசையுடன் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார் ஜெசிக்கா.
அங்கு வைத்தியர் லிப் பில்லரை ஜெசிக்காவுக்கு செலுத்தியுள்ளார். செலுத்திய சில நிமிடங்களிலேயே ஜெசிக்காவின் உதடுகள் வீங்கி அலர்ஜி ஏற்பட்டுள்ளது. நேரம் செல்லச் செல்ல அவரது உதடுகள் வீங்கிக்கொண்டே சென்றுள்ளது.
பின்னர் மருந்துகள் செலுத்தப்பட்டு உதடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
யாராவது இலவசமாக சிகிச்சை தருகிறேன் எனக் கூறினால், அதை நம்பி எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார் ஜெசிக்கா.