உதடுகள் இயற்கையான சிவப்பழகு பெற
முகத்துக்கு ஒரு வித வசீகர அழகைப் பெற்றுக் கொடுப்பதில் உதடுகளுக்கு பாரிய பங்குள்ளது.
பெரும்பாலானவர்களுக்கு இயற்கையாகவே உதடுகள் சிவந்த நிறத்தில் காணப்படும். ஆனால், ஒரு சிலருக்கு மாத்திரம் இயற்கைக்கு மாறாக உதடுகள் கருமையாக இருக்கும்.
இவ்வாறு உதடுகள் கருமையாக இருப்பது அவர்களின் முகத்தையும் சேர்த்து கருமையாக வெளிக்காட்டும். இது மிகுந்த கவலையளிப்பதாக இருக்கும்.
சூடாக தேநீர் அருந்துவது, உதடுகள் உலர்ந்து தோல் உரிவது, இன்னும் கூறப்போனால், சிலர் உதட்டின் மேற்புற தோலை உரிப்பதனால் அதனால் ஏற்படும் காயம் தோலை கருமையடையச் செய்யும், தரமற்ற உதட்டுச் சாயங்களை உபயோகப்படுத்தினாலும் உதடுகள் கருமையடையும். இவ்வாறு உதடுகள் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
உதடுகள் கருமையாக இருப்பதனால் பெண்கள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். எங்காவது வெளியிடங்களுக்குச் சென்றாலும் உதட்டுச் சாயம் சரியாக இருக்கின்றதா? அல்லது அழிந்துவிட்டதா?
உதட்டுச் சாயம் போய்விட்டால் கருமையான உதடுகள் வெளியில் தெரிந்துவிடுமே...முகத்தின் அழகு சீர்குலைந்துவிடுமே..என்ற பயம் பெண்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றது.
கருமையான உதடுகளுக்கு இயற்கையான டிப்ஸ்
- உதடுகளை சிவப்பழகு பெற வைக்க பீட்ரூட் ஒரு சிறந்த பொருள். பீட்ரூட்டை நன்றாக தோல் சீவி, துருவி அதன் சாற்றை எடுத்து இரவு உறங்குவதற்கு முன் உதட்டில் பூசிவிட்டு, காலையில் கழுவினால் உதட்டின் கருமை நீங்கும்.
- பஞ்சை ரோஸ் வோட்டரில் நனைத்து உதட்டில் மசாஜ் செய்து வர கருமை மாறும்.
- விட்டமின்கள் அடங்கிய உணவுகளான பப்பாளி, கெரட், தக்காளி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- தினமும் கற்றாழையை உதடுகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவலாம்.
- தேன் உதட்டுக் கருமையை போக்க பெரிதும் உபயோகப்படும்.
- வெண்ணெயும் உதட்டின் மென்மைத் தன்மையையும் நிறத்தையும் மாற்றுவதற்கு பெரிதும் பங்காற்றுகின்றது.
- தேங்காய் எண்ணெயும் உதட்டின் மென்மைத் தன்மையை பாதுகாக்க துணை புரியும்.
- இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட லிப் பாம்களை உபயோகப்படுத்தலாம்.