உங்க பாதம் வறண்டு போயி சொரசொரன்னு இருக்கா? அப்ப இது தான் மருந்து.. செய்து பாருங்க
பொதுவாக பெண்கள் தங்களின் முகம், கழுத்து மற்றும் கைப்பகுதி சருமத்தில்தான் அதிக கவனம் செலுத்துவார்கள்.
மாறாக அவர்களின் பாதங்களை அடிக்கடி மறந்த விடுகிறார்கள்.
காலின் அழகு தான் பெண்ணின் அழகை எல்லாம் முழுமையடைய வைக்கின்றது.
சரியான பராமரிப்பு இல்லாவிட்டால் பாதங்கள் காலபோக்கில் வரண்டு போனது போல் ஆகிவிடும்.
அந்த வகையில் இதனை தடுப்பதற்கு வீட்டிலுள்ள பொருட்களை வைத்து என்ன என்ன மருத்துவங்கள் செய்யலாம் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் கால் பேக்
தேவையான பொருட்கள்
- தேன் - 1 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதனை தண்ணீர் இல்லாமல் துடைத்து வைத்து கொள்ளவும்.
பின்னர் அதில் தேவையானளவு தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கொடுக்கப்பட்ட அளவுகளில் சேர்க்கவும்.
இவை இரண்டையும் நன்றாக கலந்து அதனை வரண்டு போய் இருக்கும்.
கால் பகுதியில் அடியில் தேய்க்கவும்.
இவ்வாறு வாரத்திற்கு மூன்று தடவைகள் தடவினால் போதும், கால்களில் இருக்கும் வறட்சி தன்மை போய் விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |