உலகின் மிக அழகான 2 வயது மம்மி - திடீரென்று கண் சிமிட்டியதா? அதிர்ந்த ஆராய்ச்சியாளர்கள்
இத்தாலியில் பதப்படுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிறுமியே உலகின் மிக அழகான மம்மி என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ரோசாலியா லோம்பார்டோ என்ற சிறுமியின் பாதுகாக்கப்பட்ட உடலைக் காண தற்போது ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இத்தாலியின் சிசிலியில் குவிகின்றனர்.
திடீரென்று கண் சிமிட்டியதா?
குறித்த சிறுமி தொடர்பில் கட்டுக்கதைகளுக்கும் பஞ்சமில்லை, கண்ணாடி சவப்பெட்டிக்குள் பாதுகாக்கப்படும் சிறுமி சுற்றுலாபயணிகளை பார்த்து கண் சிமிட்டியதாகவும் கூறுகின்றனர்.
ஆனால் அது உண்மை அல்ல எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, 100 ஆண்டுகளுக்கு பின்னரும் குறித்த சிறுமி அழகாக காட்சியளிப்பதற்கு காரணம், அவர் முறைப்படி பாதுகாக்கப்பட்டுள்ளார் என்றே கூறுகின்றனர்.
ஆனால் அதும் பொய் என கூறப்பட, மேலும் பல ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு, வெளியான பகுப்பாய்வில் சிறுமியின் உறுப்புகள் இன்னும் சிதையாமல் அப்படியே இருப்பதையும், அவளது மூளை அதன் அசல் அளவின் 50% மட்டுமே சுருங்கியுள்ளதையும் வெளிப்படுத்தியது.
மேலும், சிறுமி மீது போர்த்தப்பட்டுள்ள அங்கி இதுவரை அப்புறப்படுத்தியதில்லை, ஆனால் உரிய சோதனையில் சிறுமியின் கால்கள் மற்றும் கைகள் உள்ளபடியே இருப்பதையும் வெளிப்படுத்தியது.
மட்டுமின்றி, சிறுமியின் கண்கள் முழுமையாக மூடிய நிலையில் இல்லை, அதுவும் அவர் உயிருடன் இருக்கும் பிரமையை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறுகின்றனர்.
சிறுமியின் மரணம் தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் இல்லை என்ற போதும், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் உரிய முறைப்படி அவர் பாதுகாக்கப்பட்டுள்ளார் எனவும் கூறுகின்றனர்.
இத்தாலிய இராணுவத்தில் பணியாற்றிய செல்வந்தரான தளபதி மரியோ லோம்பார்டோவின் மகளாக இருக்கலாம் குறித்த சிறுமி என்ற ஊகமும் அப்பகுதியில் உலவிவருகிறது.
சிறுமியின் உடல் பாதுகாக்கப்படும் நிலத்தடி கல்லறையில் தற்போது 8,000 உடல்கள் பராமரிப்பில் உள்ளன. இதில் 163 சிறார்களின் உடல்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது ரோசாலியா சிறுமியின் பின்னணி தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள நிபுணர்கள் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.