உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கணுமா? அப்போ இந்த உணவுகளை எடுத்துக்கோங்க!
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க எந்த உணவுகளை சாப்பிடலாம் என்று இந்த பதிவில் காணலாம்.
கெட்ட கொலஸ்ட்ரால்
கொலஸ்ட்ரால் என்பது பிசுபிசுப்பாக இருக்கும் ஒரு மெழுகு போன்ற பொருள் ஆகும். இவை இயற்கையாகவே நமது உடம்பில் உற்பத்தி செய்யப்படுகின்றது.
கொலஸ்ட்ரால் அளவிற்கு அதிகமாகும் போது உயிரை பறிக்கும் மாரடைப்பு ஏற்படுகின்றது. இன்றைய வாழ்க்கை முறை, ஜங்க் ஃபுட், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கையினால் கொலஸ்ட்ரால் அதிகரித்து, ரத்த குழாய் சுவர்களின் படிந்து ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகின்றது.
இந்த பிரச்சனையை சரி செய்யும் உணவுகளை இங்கு கீழே காணலாம்.

ஆலிவ் எண்ணெய், எள் எண்ணெய், வெண்ணெய், வேர்கடலை போன்ற பொருள்களை சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள LDL கொழுப்பை குறைத்து HDL கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. அது மட்டுமின்றி ஆலிவ் எண்ணெய் சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள பாலிஃபீனால் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நம் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் இதுவும் நம் உடலில் LDL கொழுப்பை குறைத்து நம் உடலில் ஆரோக்கியத்தை தரும் குடல் பாக்டீரியாக்களுக்கு உதவுகிறது. ஓட்ஸ், பார்லி மற்றும் பீன்ஸ், ஆப்பிள்கள், பேரிக்காய், கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடலாம்.

சால்மன், கெளுத்தி, ட்ரவுட் போன்ற ஒமெகா 3 கொழுப்பு நிறைந்த உணவுகளையும் சாப்பிடலாம். ஏனென்றால் இதில் ஒமெகா 3 அதிகமாக உள்ளது. இதை சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இதனை வாரத்திற்கு இரண்டு முறை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

அதே போன்று தினமும் பூண்டு சாப்பிட்டால் இது நம் உடலில் உள்ள LDL கொழுப்பை 9 சதவீதம் குறைக்க உதவுகிறது. மேலும் இது நம் கல்லீரலில் கொழுப்பு சேர்வரை தடுக்கிறது. இதே போன்று பருப்பு வகைகளான பாதாம் முந்திரி போன்றவற்றை சாப்பிட்டால் நம் உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.

சோயா பால் குடிப்பதால் நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை தடுக்கிறது. நம் உடலில் கொலஸ்ட்ராலை சமநிலையாக வைக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் சமநிலை பிரச்சனை உள்ளவர்கள் சோயா பீன்ஸ் போன்றவற்றை சாப்பிடலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |