சப்பாத்திக்கு அருமையான முட்டை புர்ஜி கிரேவி... வெறும் 10 நிமிடத்தில் எவ்வாறு செய்யலாம்?
சப்பாத்திக்கு அருமையான முட்டை கிரேவி எவ்வாறு செய்றதுனு என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்று பெரும்பாலான நபர்கள் காலை மற்றும் இரவு நேரங்களில் இட்லி, தோசை, சப்பாத்தி இவற்றினை தான் எடுத்துக் கொள்கின்றனர்.
சப்பாத்தி செய்யும் போது சாதாரணமாக குருமா என்று செய்யாமல் ஒருமுறை முட்டை கிரேவி சற்று வித்தியாசமாக செய்யலாம்.
அதாவது முட்டையை புர்ஜி போன்று செய்து பின்பு கிரேவியாக வைக்கலாம். இவை சப்பாத்திக்கு அருமையாக இருப்பதுடன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடவும் செய்வார்கள்.
தற்போது முட்டை புர்ஜி கிரேவி ஹோட்டல் ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
முட்டை - 4
உப்பு - சிறிது
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
தக்காளி - 2
பூண்டு - 5-7
இஞ்சி - 1 இன்ச்
கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
அரைத்த தக்காளி விழுது
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - சிறிது
முட்டை புர்ஜி
கொத்தமல்லி - சிறிது
செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்த அதில் எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும். பின்பு பவுல் ஒன்றில் முட்டைகளை உடைத்து சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
அடித்துவைத்த முட்டை கலவையை வதக்கிவரும் வெங்காயத்தில் சேர்த்து, புர்ஜி போன்று செய்து மிளகுதூள் தூவி கிளறி தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸி ஜார் ஒன்றில் பூண்டு, தக்காளி, இஞ்சி, கஸ்தூரி மெத்தி இவற்றினை சேர்த்து அரைத்து தனியாக வைக்கவும்.

கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, சீரகம் போட்டு தாளித்து, பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை நன்றாக வதக்கவும்.
இதனுடன் அரைத்து வைத்த தக்காளி விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து 4 நிமிடம் நன்றாக வதக்கவும்.
சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் அடுப்பில் கொதிக்க வைத்து, அதனுடன் முட்டை புர்ஜியை சேர்த்து கிளறி சிறிதுநேரம் கழித்து இறக்கினால், அருமையான முட்டை புர்ஜி கிரேவி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |