கல்லீரலில் கொழுப்பு பிரச்சனையா? இந்த உணவினை சாப்பிடாதீங்க
கல்லீரலில் கொழுப்பு பிரச்சனை தற்போது பெரும்பாலான நபர்களுக்கு வரும் நிலையில், நாம் சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்தும், எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிந்து கொள்வோம்.
கல்லீரல்
இன்றைய காலத்தில் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையால் பெரும்பாலான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொழுப்பு கல்லீரலை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், கல்லீரல் செயலிழப்பிற்கு வழிவகுக்கும்.
இதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மிகவும் முக்கியமாகும். கல்லீரலில் தேங்கியுள்ள கொழுப்பினை கரைக்க உதவும் உணவுகளை நாம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். மேலும் இந்த உணவுகள் நச்சு நீக்க செயல்முறையினை எளிதாக்கவும் செய்கின்றது.

பிளாக் காபி
கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் பிளாக்காபி சிறந்த பானமாக இருக்கின்றது. தினமும் பிளாக் காபி அருந்துவது கல்லீரல் நொதிகளின் அளவை இயல்பாக்குகின்றது. கல்லீரல் நார்ப்பெருக்க அபாயத்தையும் குறைக்கின்றது. மேலும் இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கல்லீரலை பாதுகாத்து, கொழுப்பு சேர்வதை மெதுவாக்குகின்றது.

கீரை
பச்சை இலை காய்கறிகள் உடம்பிற்கு எண்ணற்ற ஆரோக்கியத்தினை அளிப்பதுடன், கல்லீரலுக்கு பாதுகாப்பினை அளிக்கின்றது. கீரையில் நைட்ரேட்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள், கல்லீரல் கொழுப்பினை குறைப்பதற்கு உதவுகின்றது.

பிரோக்கோலி
கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு ப்ரோக்கோலி சிறந்த உணவாக இருக்கின்றது. ப்ரோக்கோலி சல்ஃபோராஃபேன் என்ற சேர்மம் கல்லீரலை பாதுகாக்கின்றது. மேலும் இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளும் கல்லீரலை சுத்தப்படுத்தவும் செய்கின்றது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்
சிவப்பு இறைச்சி நிறைவுற்ற கொழுப்புகளை உட்கொள்வது கல்லீரல் கொழுப்பு சேர்வதை அதிகரிக்கின்றது. ஆதலால் சிவப்பு இறைச்சியை தவிர்க்க வேண்டும்.

ரொட்டி, பாஸ்தா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை தவிர்க்கவும். இவை கொழுப்பு கல்லீரல் உள்ளவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகின்றது.

அதிக அளவு சர்க்கரை மற்றும் அதிகப்படியான உப்பு இவற்றினை தவிர்க்க வேண்டும். இவை கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்துகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |