உங்களது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமா?
இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இதயம்
மனிதர்களின் உடம்பில் மிகவும் முக்கியமான உறுப்பு இதயம் ஆகும். உயிர் வாழ்வதற்கு இதயம் துடிப்பது அவசியமாகும். ஆகவே இதயத்தை மிகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தற்போது மாறிவரும் மோசமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் இவை இதய நோய்களை அதிகமாக ஏற்படுத்துகின்றது.
ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக் கொண்டால் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை நாம் குறைத்துக் கொள்ளலாம்.
இதய ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடன்ட்கள் உள்ள உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம்.
இதயம் ஆரோக்கியமாக இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடவும்.
அக்ரூட் பருப்புகள்:
அக்ரூட் பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இதயம் தொடர்பான பிரச்சனையினை சுலபமாக தவிர்க்க முடியும். ஏனெனில் இவை கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு முக்கிய பங்கு வகித்து இதயத்தை பாதுகாக்கும்.
பெர்ரிகள்:
ஸ்ட்ராபெரி, ப்ளூபெர்ரி, பிளாக் பெர்ரி பழங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றது. இதில் நல்ல ஊட்டச்சத்து, நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றம் அழுத்தம் மற்றும் வீக்கத்திலிருந்து பாதுகாக்கின்றது.
கொழுப்பு நிறைந்த மீன்கள்
கொழுப்பு நிறைந்த மீன்களான சால்மான், காணா கொத்தி, மத்தி, சூரை போன்ற மீன்களை சாப்பிட்டு வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
டார்க் சாக்லேட்:
டார்க் சாக்லேட்டில் ஃபிளாவனாய்டு போன்ற ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ள நிலையம், இதய நோய்களை குறைத்து, இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்தும்.
கிரீன் டீ
கிரீன் டீயில் இருக்கும் பண்புகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் பண்புகள் கொழுப்பை குறைக்க பெரிதும் உதவுகிறது.
பச்சை இலை காய்கறிகள்:
இரும்பு, கால்சியம், நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் பச்சை இலை காய்கறிகளில் நிறைந்துள்ளது. இது இதய நோயை குறைக்க பெரிதும் உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |