இட்லியை இப்படி சாப்பிடுகிறீர்களா? பின்விளைவை ஏற்படுத்தும் செஃப் வெங்கடேஷ் பட் கருத்து
காலை உணவு கட்டாயமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகமாக எல்லோரது வீட்டிலும் எடுத்துக்கொள்ளும் உணவு இட்லி தான். இந்த இட்லியை நாம் முறைப்படி உண்ண வேண்டும்.
இட்லி மட்டுமல்ல உணவில் எதுவாக இருந்தாலும் அதை முறைப்படி உண்ணுவது அவசியம். இதை மீறி நாம் அலட்சியமாக எடுத்துக்கொள்ளும் போது இது நமக்கு பின்விளைவை ஏற்படுத்தும்.
இட்லியை இப்படித்தான் சாப்பிட வேண்டும் ஒரு முறையை செஃப் வெங்கடேஷ் பட் கூறியுள்ளார். இதை இந்த பதிவில் பார்க்கலாம்.
செஃப் வெங்கடேஷ் பட்
அரிசி மற்றும் உளுந்து மாவை சேர்த்து புளிக்க வைத்து தயார் செய்யப்படும் இந்த இட்லிக்கு சட்னி, சாம்பார் என பலவையாக சைடிஷ் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு.
இதை காலை மட்டுமல்ல இரவு உணவாக எடுத்துக்கொள்வார்கள். ஆனால் இந்த இட்லியை ஒரு முறைப்படி உண்ண வேண்டும் என்று செஃப் வெங்கடேஷ் பட் கூறுகின்றார்.
இட்லியை ஒரு கப் சாம்பார் அல்லது ஒரு சட்னி வகை சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது. அதுவே 4 இட்லிக்கு, 4 வகை சட்னி, இட்லி பொடி, மிளகாய் பொடி நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டால் சாப்பிடுவதற்கு நன்றாகத்தான் இருக்கும்.
ஆனால் பின்னால், வயிற்றில் என்னென்ன பாதிப்புகள் உண்டாகுமோ அத்தனையும் உண்டாகும். நெஞ்செறிச்சல், உள்ளிட்ட பல பிரச்சனைகள் வரும். அப்போது வந்து நான் வெறும் இட்லி தான் சாப்பிட்டேன் எப்படி அந்த பாதிப்பு வந்தது என்று சொல்ல முடியாது.
2 இட்லிக்கு ஒரு கப் சாம்பார் என்பது சரியானது. இப்படி சாப்பிட்டால் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு. அதுவே, 2 இட்லிக்கு 6 கப் சாம்பார் ஊற்றி சாப்பிடுவேன் என்று சொன்னால் பிரச்னைதான் வரும்.
அதேபோல் ஒரு மாதத்திற்கு காலையில் பொங்கல் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டு இருந்தால் உடல் எடை கூடும் என்று வெங்கடேஷ் பட் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |