முட்டையுடன் இந்த பொருளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க... ஆபத்து
பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியம் நிறைந்ததாகவும், எமது ஆற்றல்களை துண்டும் வகையிலும் இருக்க வேண்டும்.
உணவுகளை அதிகமாக எடுத்து கொள்வதால் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.
ஆகையால் எந்த உணவினையும் நாம் அளவோடு தான் சாப்பிட வேண்டும் என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும்.
உடலில் ஏற்படும் என்பது சதவீதமான நோய்களுக்கு நாம் எடுத்து கொள்ளும் உணவுகள் தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்தவகையில் முட்டையில் அதிகமான கால்சியம், இரும்புச்சத்து இருக்கிறது. இது உடல் வளர்ச்சி, இரத்தயோட்டம் என்பதில் கவனம் செலுத்துகிறது.
மேலும் முட்டையில், வைட்டமின் A, வைட்டமின் B6, வைட்டமின் B12, வைட்டமின் D, வைட்டமின் E, வைட்டமின் K, மெக்னீசியம், பொட்டாசியம், ஜிங்க், புரோட்டீன், சல்பர் மற்றும் சோடியம் ஆகிய ஊட்டசத்துக்களும் இருக்கின்றன.
ஆனால் முட்டையை சாப்பிடும் போது சில உணவுகளை எடுத்து கொள்வது பிரச்சினையை ஏற்படுத்தும். அந்த உணவுகள் தொடர்பில் தெரிந்து கொள்வோம்.
முட்டை சாப்பிட்டால் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க
1. சர்க்கரை
முட்டையை சாப்பிடும் போது அதில் எக்காரணம் கொண்டும் சர்க்கரையை சேர்த்து விட கூடாது. ஏனென்றால் முட்டையில் அமினோ அமிலம் சர்க்கரையிலுள்ள அமினோ அமிலத்துடன் தாக்கம் புரிந்து நச்சுத்தன்மையை ஏற்படுத்தி விடும். இதனால் இரத்தத்தில் கட்டிகள் வர ஆரம்பிக்கும்.
2. டீ, காபி
முட்டை சாப்பிட்டு விட்டு அதில் டீ மற்றும் காபி சேர்த்து குடிக்கும் போது அது மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுத்தும். அத்துடன் செரிமாண பிரச்சினையும் ஏற்படுத்துகிறது.
3. அசைவம்
அசைவ உணவுகள் என்றால் அதில் கண்டிப்பாக ஒரு முட்டை இருக்கும். நாம் இதுவும் அசைவம் தானே என சாப்பிட்டு விடுவோம். ஆனால் அசைவ உணவுகளுடன் முட்டையை சேர்த்து சாப்பிடக்கூடாது. காரணம், இரண்டிலும் புரதச்சத்துக்கள் இருப்பதால் இது உடலை மந்தமாக்குகிறது. இதனால் முட்டையை தவிர்ப்பது நல்லது.
4. சோயா பால்
முட்டையுடன் சோயா பாலை சேர்த்து சாப்பிடும் போது சோயாவிலிருக்கும் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் என்ற கொழுப்பு அமிலங்கள் புரதச்சத்துக்களை உடலுக்கு சேருவதில் சிக்கல்கள் ஏற்படுகிறது.
5. வாழைப்பழம்
வாழைப்பழத்தில் இருக்கும் சில பதார்த்தங்கள் முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துக்களுடன் தாக்கம் புரிந்து காலப்போக்கில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.
முக்கிய குறிப்பு
முட்டையை செரிமான பிரச்சனையுள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.