உடல் எடையை கிடுகிடுவென குறைக்கும் சோயா பால்.. எப்போது அருந்த வேண்டும்?
சோயா பாலில் பல வகையான எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இதில், புரதசத்து, நார்ச்சத்து, சர்க்கரை, கொழுப்புசத்து போன்றவை அதிகமாக இருக்கிறது. மேலும், சோயா பாலில் உலர்ந்த சோயாபீன்ஸில் 36–56% புரத அளவு உள்ளது.
சோயாவில் புரதச்சத்து அதிகம் இருப்பதுடன், குறைந்த நிறைவுற்ற கொழுப்பு உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. சோயா பால் ஆனது சீனா மற்றும் இந்தியாவில் விற்கப்படுகின்றன. பால் பொருட்கள் மற்றும் இறைச்சியை சாப்பிடாதவர்களுக்கு சோயா பால் மிகுந்த ஊட்ட சத்தை அளிக்கும்.
சோயா பாலில் உள்ள புரத சத்து மனித உடலின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். புரத சத்தில் உள்ள அமினோ அமிலங்கள் உடல் நலக் கோளாறு ஏற்படும் போது அதனை சீரமைக்க பல நன்மைகளை செய்கின்றது.
மேலும், டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சோயா பாலை அருந்துவதால் அவர்கள் இரத்த அழுத்தம் சீராகிறது. இதனால் இது இதய ஆரோக்கியத்தை சீராக்குகிறது.
சோயா பாலை அதிகம் உட்கொள்வதன் மூலம் ஆண்மை சுரப்பி புற்று நோய் தடுக்கப்படுகிறது. ஆண்களுக்கு இந்த நோயின் பாதிப்புகள் தடுக்க படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
சோயாவில் உள்ள ஐசோபிளவோன்ஸ் கொழுப்பிணியாக்கத்தை தடை செய்து, கொழுப்பு திசுக்கள் வளர்ச்சியை குறைக்கிறது.