பித்தத்தை விரட்டியடிக்கும் சாப்பாட்டு வகைகள்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே..
நீண்ட நேர தூக்கத்திற்கு பின்னர் எழும்பும் போது பித்தம் அதிகமாக இருக்கும்.
இதனை குறைக்கும் வகையில் காலை நேரங்களில் உணவை எடுத்து கொள்ள வேண்டும்.
ஆனால் நாம் காலை நேரங்களில் எடுத்து கொள்ளும் காபி, தேநீர் வகைகள் பித்தத்தை அதிகரிக்கும்.
சாப்பிட்ட பின்னர் சிலருக்கு நெஞ்சு கறிக்குமா எதுக்களித்துக்கெண்டே இருக்கும் இது போன்ற பிரச்சினைகள் எழுவதற்கு முக்கிய காரணமாக பித்தம் அதிகரிப்பு கூறப்படுகின்றது.
அந்த வகையில் பித்தம் அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்கும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
பித்தத்தை குறைக்கும் உணவுகள்
1. ஆவாரை கஷாயம் பித்தம் அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க உதவியாக இருக்கின்றது. அத்துடன் பித்தம் அதிகரிக்கும் பொழுது சர்க்கரையின் அளவு அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கின்றது.
மேலும் கிராமங்களில் கிடைக்கும் ஆவாரம்பூ தேநீர் குடித்து வருபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
2. இஞ்சித் துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் அதிகரிப்பு ஆயுளுக்கும் வராது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
அத்துடன் பித்தத்தால் மயக்கமடைந்தவர்களுக்கு இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு, தேன் கலந்து கொடுத்தால் கொடுத்த நொடியே பித்தம் தெளியும்.
3. புளிப்பு நிறைந்த உணவுகளை அடிக்கடி எடுத்து கொண்டால் பித்தம் குறையும். அதாவது எலுமிச்சை சாதம் வாரத்திற்கு 3 முறை எடுத்து கொள்வது சிறந்தது.
4. பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
5. ரோஜாப்பூவை கொண்டு பால் கஷாயம் செய்து குடித்தால் அதிகரித்த பித்தம் மலத்துடன் வெளியேறும்.
மேலும் வீடுகளில் இருக்கும் பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்தும் கஷாயம் செய்து குடிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |