பித்தம் உடலுக்கு நன்மையானதா?
பித்தம் நல்லதல்ல என்று பலர் சொல்லக் கேட்டிருப்போம். காரணம், எண்ணெயில் பொரித்த உணவுகள், மீன், நண்டு, கோழி, புளிப்பு, உவர்ப்பு போன்றவை பித்தத்தினால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு காரணமாக அமைகின்றது. இதன் காரணமாக 40 வகையான பித்தம் தொடர்பான நோய்கள் வரக்கூடும்.
இருப்பினும் உடலுக்கு பித்தம் பல நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கின்றது. நமது பாரம்பரிய மருத்துவமானது, பித்தத்தை ஐந்து வகையாகப் பிரித்துக் காட்டுகின்றது.
உணவை சமிபாடடையச் செய்து, அதிலிருக்கும் சத்தையும் தேவையில்லாத கழிவையும் பிரிக்கின்றது. மற்ற இடங்களிலுள்ள பித்தங்களுக்கு தன் இடத்திலிருந்தே சத்துக்களை அனுப்பி ஊக்கமளிக்கின்றது. இது இரைப்பை ஜீரணப்பையின் நடுவில் இருக்கும். இதை பாசகம் என்பார்கள்.
உணவின் நீர்ச்சத்தான பகுதிக்கு செந்நிறத்தை அளிக்கும் பித்தத்துக்கு ரஞ்சக பித்தம் எனப் பெயர்.
இதயத்தை தங்குமிடமாகக் கொண்டு இயங்கும் பித்தம் சாதக பித்தம் எனப்படுகிறது.
பார்க்கும் சக்தியைக் கொடுப்பது ஆலோசக பித்தம்.
சருமத்துக்கு பொலிவைக் கொடுப்பது புராஜக பித்தம் ஆகும்.
இவ்வாறு பித்தத்தை ஐந்து வகையாகப் பிரித்துள்ளனர்.