உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? சிறுநீரக பிரச்சனையாம்
உடலில் மிகவும் முக்கியமான பகுதி சிறுநீரகம், இவை ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நம்மால் பல வேலைகளை சரிவர செய்ய முடியும்.
உடலில் இந்த பகுதி செயலிழந்தால் அது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இந்த உறுப்பில் பிரச்சனைகள் இருந்தால் அது சில அறிகுறிகள் மூலம் அதை வெளிக்காட்டும்.
இந்த அறிகுறிகள் தெரிந்தவுடன் நீங்கள் வைத்தியரை நாடினால் சிறுநீரக பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
எனவே இந்த பகுதியில் இதற்கான அறிகுறிகள் எவ்வாறு இருக்கும் இதற்கு எப்படியான உணவுகளை உண்ணலாம் இதை எவ்வாறு தடுப்பது? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறுநீரகம்
இந்த சிறுநீரகத்தில் பிரச்சனை இருந்தால் அதாவது சோடியம் உடலில் அதிகமாகும் போது அது உடலின் கால் கை பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
மற்றும் சில சமயங்களில் உங்களுக்கு சுவாசிப்பதில் பிரச்சனை இருக்கிறது என்றால் அது கிட்னியில் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாகும்.
நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீருடன் சேர்ந்து ரத்தமும் வெளியேறும். இந்த நேரத்தில் சோர்வு சோம்பல் போன்ற பிரச்சனைகள் வரலாம். உங்களுக்கு உறக்கம் என்பது சரியாக வராது.
சிறுநீருடன் சேர்ந்து நுரை வெளியேறும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அது கட்டாயம் சிறுநீரகப் பிரச்சனை என்பதால் உடனடியாக நீங்கள் மருத்துவரிடம் அறிவுரை கேட்பது அவசியம்.
இந்த சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் மஞ்சள் இது ஒரு கிருமி நாசினி, இதை கண்டிப்பாக ஒவ்வொரு நாளும் எடுத்து கொள்ள வேண்டும்.
சிறுநீரகத்திற்கு நல்ல உணவான பூசணிக்காய் விதையை கண்டிப்பாக உண்ண வேண்டும். எல்லோருக்கும் தெரிந்த இஞ்சி, நீங்கள் தினமும் உண்ணலாம்.
இப்படி உண்பதால் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தி நரம்புகளில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. தயிர் மற்றும் கொத்தமல்லி இலையை எடுத்து கொள்ள வேண்டும்.
இதனால் ரத்த நாளங்களில் உள்ள அடைப்புக்களை நீக்க இந்த கொத்த மல்லி உதவும். மற்றும் சிறுநீரகத்தில் இருக்கும் கல்லை கரைப்பதற்கு இது சிறந்த ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு 6 அல்லது 8 கிளாஸ் தண்ணீரை கண்டிப்பாக குடிக்க வேண்டும். இதனால் சிறுநீரகத்தை பாதிக்கக்கூடிய நச்சுக்கிருமிகள் சிறுநீர் வழியாக வெளியேறும்.
ஒரு நாளைக்கு தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிட வேண்டும். இதுபோன்ற உணவுகளை நீங்கள் உண்டால் உங்கள் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |