இறைச்சி அதிகமாக சாப்பிடுபவரா நீங்க? அப்போ இந்த புற்றுநோய் ஆபத்து
பொதுவாகவே உணவு மனிதனினுக்கு மாத்திரமன்றி அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை தேவையாக காணப்படுகின்றது.
மனிதர்களை பொருத்தவரையில் பசிக்காகவும் உடல் ஆரோக்கியத்துக்காகவும் மாத்திமைன்றி சுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
பொதுவாகவே அசைவ உணவை விரும்பாதவர்கள் யாருமில்லை. அப்படி அசைவ பிரியர்களின் பட்டியலில் இறைச்சி வகைகளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அதிகமாக இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு கோலோரெக்டல் புற்றுநோய் (Colorectal cancer) ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளது இதற்கான காரணங்கள் குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
பெருங்குடல் புற்றுநோய்
வருடாந்தம் பெருங்குடல் புற்றுநோயால் மில்லியன் கணக்காக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பெருங்குடல் புற்றுநோய் செரிமான அமைப்பில் உள்ள முக்கியமான உறுப்புகளை பாதிப்பதால் ஊட்டச்சத்து உறிஞ்சுதல், மலம் உருவாக்கம் மற்றும் கழிவு நீக்கம் போன்வற்றில் தாக்கம் செலுத்துகின்றது.
அதிகப்படியாக இறைச்சி சாப்பிடுவதும் பெருங்குடல் புற்றுநோயை ஏற்படுத்தும் பிரதான காரணியாக இருக்கின்றது.
மேலும் உடலுக்கு போதுமான உடற்பயிற்சி இல்லாமை, மது அல்லது புகையிலை பயன்படுத்துவது, உணவில் பழங்கள் காய்கறிகளை தவிர்ப்பது,குறைந்த நார்ச்சத்து மற்றும் அதிக கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடுவது முறையற்ற உணவுப்பழக்கத்தை பின்பற்றுவது போன்றவை பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றது.
இதிலும் குறிப்பாக நீண்ட நாட்களுக்கு இறைச்சிகள் அதிகம் அடங்கிய உணவுகளை சாப்பிடுவதாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமான நுகர்வதாலும் பெருங்குடல் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கின்றது.
பொதுவாகவே இறைச்சிகள் அதிகப்படியான வெப்ப நிலையில் சமைக்கப்படுகின்றது. இதனால் இறைச்சியல் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் உருவாகின்றது.
பெருங்குடலில் ஏற்படும் நாள்பட்ட வீக்கம் காரணமாக குடல் சுவர்களில் தொடர்ச்சியாக செல்கள் மாற்றமடைவதால் கட்டிகள் உருவாகின்றன. கட்டுப்படுத்த முடியாத செல் வளர்ச்சி ஏற்படுகின்ற பட்சத்தில் இது புற்றுநோயாக உருவெடுக்கின்றது.
பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள்
மலச்சிக்கல் வயிற்றுப்போக்கு மலம் கழித்த பிறகும் மலம் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு, மலத்தில் குருதி வெளியேறுதல், மலம் கழிக்கும் பொழுது அடிவயிற்றில் வலி ஏற்படுவது மற்றும் ரத்த சோகை, திடீர் உடல் எடை இழப்பு போன்றவை பெருங்குடல் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாகும்.
இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் ஒருபோதும் அலட்சியப்படுத்த கூடாது. உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்வதன் மூலம் பெருங்குடல் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே குணப்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |