IAS அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்! ஆவேசத்தில் கூறியது என்ன?
திருமண நிகழ்வில் அதிகமான உணவுகள் சாப்பிட்டு முடித்து, அதிகமான உணவுகள் வீணாக்கப்பட்டுள்ள புகைப்படத்தினை ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பகிர்ந்து ஆவேசமான கருத்துக்களைக் கூறியுள்ளார்.
திருமணத்தில் விருந்து
இன்றைய காலத்தில் திருமணம் என்பது சொந்தங்கள் உறவினர்கள் என அனைவரையும் பெரிய அளவில் பேச வைக்கும் விதமாக ஆடம்பரமாக நடைபெற்று வருகின்றது.
ஆம் திருமண பத்திரிக்கை தொடங்கி சாப்பாடு வரை அனைத்தையும் ஆடம்பரமாகவே ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் இவ்வாறு நடைபெறும் நிகழ்வுகளில் உணவுகள் மிச்சமிருந்தால் அதனை அருகில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லங்களில் கொண்டு கொடுப்பது வழக்கம்.
ஆனால் சில இடங்களில் மிகவும் மோசமாக உணவுகளை வீணாக்குவதை செய்து வருகின்றனர் அவ்வாறான அதிர்ச்சி புகைப்படத்தினையே ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரியின் பதிவு
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அவானிஷ் சரண், ஒரு நிகழ்ச்சியில் மேஜை மீது ஏராளமான உணவுப் பொருட்கள் மீதம் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "இப்படியான ஆட்களை முதலில் இது போன்ற நிகழ்ச்சிக்கு வருவதையே தடை செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
சிறிய விடயம் கூட சமூகவலைத்தளங்களின் மூலம் எளிதில் அனைவருக்கும் சென்றடையும் நிலையில், தற்போது இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளதுஃ
ஒருவேளை உணவிற்காக கஷ்டப்படும் நபர்களுக்கே தெரியும் உணவின் அருமை... ஆனால் ஆடம்பரம் என்ற பெயரில் இவ்வாறு உணவுகளை வீணடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறி வருகின்றனர்.