பீட்சா பிரியர்களே.. இனி எத்தனை பீஸ் பீட்சா சாப்பிடணும் தெரியுமா?
பொதுவாக துரித உணவுகள் என கூறும் போது நமது ஞாபகத்திற்கு பீட்சா தான்.
ஆண்டுகள் பல மாறினாலும் தலைமுறைகள் புதிது புதிதாக வந்தாலும் நாம் மறக்காம இருப்பதும் இந்த பீட்சா தான்.
மேலும் பீட்சாவின் தனித்துவத்தை காட்டுவதற்காக சீஸ் சேர்க்கப்படுகிறது. இதனால் அதிகமானவர்கள் இதன் சுவையை நாக்கில் வைத்து கொண்டு தேடி அலைவார்கள்.
மேலும் பீட்சாவை வீட்டில் வாங்கி வைத்து கொண்டு தேவையான நேரங்களில் சூடுபடுத்தியும் சாப்பிடுகிறார்கள்.
அந்த வகையில் பீட்சா இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தாலும் அதிலும் சில எதிர்மறையான விடயங்கள் இருக்கின்றது. அது தொடர்பில் தெரிந்து கொள்வோம்.
1. இதய நோய் அபாயம்
பொதுவாக நாம் அதிகம் எடுத்து கொள்ளும் பீட்சாவில் அதிகமான சீஸ் மற்றும் ப்ராசஸ்டு மீட் டாப்பிங்ஸ் இருக்கின்றது இது உடம்பில் அதிகளவான கொழுப்பை சேர்த்து விடும். இதனால் கொலஸ்ட்ரால் லெவல் அதிகரிக்க கூடும். இவ்வாறு அதிகரிக்கும் போது இதயத்திற்கு செல்லும் சில வழிகளில் அடைப்பு ஏற்பட்டு இதய நோய்கள் வரலாம்.
2. வேகமாக எடை அதிகரிக்கும்
தற்போது இருப்பவர்கள் வயதிற்கு மீறிய எடை இருந்து கொண்டு அதனை எப்படி குறைக்கலாம் என யோசித்து கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் சாப்பிட்டாலும் அதிகப்படியான கொழுப்பு இருப்பதால் தாறுமாறாக எடை போடும்.
ஒரு ஸ்லைஸ் பீட்சாவில் 400 கலோரிகள் உள்ளன. மேலும் சாப்பிடும் உணவுகளில் 800 கலோரிகள் இருக்கும். மொத்தமாக 1200 கலோரிகள் கொண்ட உணவை சாப்பிடும் போது மனிதர்களின் உடலில் 40% - 60% வரை கலோரிகள் நிரம்பிவிடுகின்றது.
3. கேன்சர் அபாயம்
Pepperoni, Bacon மற்றும் Sausage போன்ற ஹை-ஃபேட் ப்ராசஸ்ட் இறைச்சிகளை தான் பீட்சாவில் சேர்க்கிறார்கள். இவ்வாறு சேர்வதால் குடல் மற்றும் வயிற்று புற்றுநோய் போன்ற சில வகை கேன்சர்கள் உருவாக ஆரம்பிக்கும். மேலும் பீட்சா சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படும் உணவு என்பதால் செரிமானத்தை மெதுவாக்கும்,வளர்சிதை மாற்றத்தை மந்தமாக்கின்றது.
இதிலிருந்து தப்பித்து கொள்ள சில வழிகள்
- பீட்சாவை ஆரோக்கியமான முறையில் வீட்டில் தயாரித்தல்.
- பீட்சாவிற்கு பயன்படுத்தும் சீஸ் அளவையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
- ஹோல் வீட் ரொட்டி போன்ற ஆரோக்கியமான பொருட்களிலிருந்து பீட்சாவை தயாரிக்கலாம்.
- அமிர்தமாக இருந்தாலும் அளவு முக்கியம். இதனால் பீட்சாவை அளவுடன் எடுத்து கொள்ள வேண்டும்.
- அடிக்கடி வாங்கி சாப்பிடுவதை நிறுத்தி விட்டு எப்போதாவது வாங்கி சாப்பிடுவது நல்லது.