ஆசையாக பீட்சா ஆர்டர் செய்த பெண்ணிற்கு கிடைத்த பேரதிர்ச்சி: உள்ளே கிடந்தது என்ன தெரியுமா?
இங்கிலாந்தில் ஆசை, ஆசையாய் சாப்பிட வாங்கிய பீட்சாவில் இரும்பு போல்ட்டுகள், நட்டுகள் இருந்ததால் அதனை ஆர்டர் செய்த பெண் அதிர்ச்சி அடைந்த நிலையில், பீட்சா நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இங்கிலாந்து லங்காஷயர் மாகாணத்தை சேர்ந்தவர் ஜெம்மா பார்டன். இவர் ஆசையாக பீட்சா ஆர்டர் செய்த நிலையில், வீடு தேடி பீட்சாவும் வந்துள்ளது.
பீட்சா வந்ததும் ஆசை ஆசையாய் சாப்பிட ஆரம்பித்த பெண்ணிற்கு அதனுள் இரும்பு நட்டுகள், போல்ட்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜெம்மா பார்டன் உடனடியாக பீட்ஸா ஆர்டர் செய்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் செய்தார்.
இதனை தொடர்ந்து இதற்காக மன்னிப்பு கேட்ட டொமினோஸ் நிறுவனம் ஜெம்மா பார்டன் அந்த பீட்சாவுக்கு செலுத்திய பணத்தை அவரிடமே திருப்பி கொடுத்தது. பீட்சாவில் இரும்பு நட்டுகள், போல்ட்டுகள் இருப்பது குறித்து ஜெம்மா பார்டன் முகநூலில் பதிவிட்டார்.
இரவில் எனது டோமினோஸ் பீட்ஸா ஆர்டரில் நான் கண்டவற்றால் முற்றிலும் திகிலடைந்தேன். பீட்சாவில் சுடப்பட்ட NUT மற்றும் BOLT இருக்கிறது. நான் இதில் பாதியை சாப்பிட்டேன் என்று என்னால் நம்ப முடியவில்லை.
தயவுசெய்து சாப்பிடுவதற்கு முன் உங்கள் பீட்சாக்களை இருமுறை சரிபார்க்கவும். டொமினோஸ் தரச் சோதனை செய்கிறார்களா? என்று ஜெம்மா பார்டன் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து டொமினோஸ் நிறுவனமும் இது தொடர்பாக மன்னிப்பு கேட்டு பதிவு வெளியிட்டுள்ளது.
''டோமினோவில் நாங்கள் வாடிக்கையாளர் திருப்தி மற்றும் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். தெரியாமல் நடந்த இந்த தவறு மிகவும் அரிதானது ஜெம்மா பார்டனின் புகாரைப் பெற்றவுடன், அவருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டோம்.
மேலும் இது தொடர்பாக எங்கள் ஸ்டோர் ஊழியர்களிடம் விசாரித்து உடனடியாக ஜெம்மா பார்டனுக்கு முழு பணத்தைத் திரும்ப வழங்கினோம்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான சரியான செயல்முறையை எங்கள் ஸ்டோர் குழுவுக்கு நினைவூட்டியுள்ளோம்'' என்று டொமினோஸ் நிறுவனம் கூறியுள்ளது.
