ஆயுளை நீட்டிக்கும் உணவு ரகசியம்... நாம் சாப்பிடும் உணவு சரியா?
ஆயுளை நீட்டிக்கும் உணவு ரகசியம் குறித்து உணவியல் நிபுணர் கூறியுள்ள சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
காய்கறி, பழங்கள்
பொதுவாக பழங்கள் மற்றும் காய்கறிகள் தான் உடம்பிற்கு ஆரோக்கியத்தை தருபவை ஆகும். தினமும் உணவில் எந்தளவிற்கு இவற்றினை சேர்த்துக் கொள்கின்றோமோ அந்த அளவிற்கு நாம் ஆரோக்கியமாக வாழலாம்.
இன்று பெரும்பாலான நபர்கள் தட்டின் ஓரத்தில் குறைவாக காய்கறி, பெரும்பாலான இடத்தினை நிரப்பும் வகையில் சோறு இவற்றினை வைத்து சாப்பிடுகின்றனர்.
ஆனால் இவ்வாறு செய்வது தலைகீழான ஒரு மாற்றம் ஆகும். ஆம் நாம் காய்கறிகளை தான் அவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும். சோறு ஒரு சிறிய பவுல் எடுத்துக் கொண்டாலே போதுமானதாகும்.
பழங்கள் காய்கறிகள் சாப்பிட்டால் தான் இதயம் ஆரோக்கியமாக இருப்பதுடன், மனிதர்களின் ஆயுளும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றது.
நாம் சாப்பிடுவது சரியா?
தற்போது 4 பேர் கொண்ட குடும்பத்தில் காய்கறிகள் 250 கிராம் வாங்கி சமைப்பதையே அதிகம் என்றும், இதனை மனதில் வைத்துக் கொண்டு நாங்கள் காய்கறிகள் அதிகமாக சாப்பிடுகின்றோம் என்று பலரும் கூறி வருகின்றனர்.
ஆனால் நான்கு பேருக்கு ஒரு கிலோ காய்கறி கொண்டு சமைத்து சாப்பிட வேண்டுமாம். உங்கள் சாப்பாட்டுத் தட்டில் பாதியளவு காய்கறிகள்தான் இருக்க வேண்டும். கால் பாகம் அரிசி சாதமும், மீதமுள்ள கால் பாகம் பருப்பு அல்லது முட்டையென்று இருக்க வேண்டும்.
சிலர் வடகம், சிப்ஸ் போன்றவற்றை செய்து சாப்பிடுகின்றனர். தற்போது மாதம் லிட்டர் கணக்கில் எண்ணெய்யை சமையலுக்கு செலவு செய்து வருகின்றனர்.
ஆனால் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் எண்ணெய்யே போதுமானதாகும். ஆனால் அதிகமாக எண்ணெய்யில் பொரித்த உணவுகளை நாம் சாப்பிட ஆரம்பித்துள்ளதால், எண்ணெய்யை சமையலுக்கு அதிகமாகவே பயன்படுத்தி வருகின்றோம். இதற்கு காய்கறி மீது கவனம் செலுத்த வேண்டும்.
ஒன்றரை கப் காய்கறி
நபர் ஒருவர் ஒரு வேளைக்கு 150 கிராம் காய்கறி சாப்பிட வேண்டும். அதிலும் வேக வைத்தவுடன் அளவில் குறைந்துவிடும் காய்கறிகளான வெண்டைக்காய், நீர்க்காய்கள் இவற்றினை 200 கிராம் சாப்பிட வேண்டும்.
பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகள் வெந்தாலும் அளவு குறையாது என்பதால், அவற்றை 150 கிராம் சாப்பிட்டாலே போதும்.
கிராம் கணக்கை அளவிட முடியாதவர்கள், ஒன்றரை கப் காய்கறிகளை சாப்பிட வேண்டும். வேக வைத்த காய்கறிகள் ஒரு கப், காய்கறி சாலட், காய்கறி சூப் என்று பருகலாம்.
மேலும் அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களை கட்டாயம் நாம் சாப்பிட வேண்டும். அளவு பெரியதாகவும், சிறியதாகவும் இல்லாமல் நடுத்தர அளவு கொண்டதாக எடுத்துக் கொள்ளலாம்.
நீரிழிவு நோய் பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்துவிட்டுச் சாப்பிடுங்கள். இவ்வாறு காய்கறி, பழங்கள் எடுத்துக் கொண்டால் நிச்சயம் ஆளும் நீளும் என்று உணவியல் நிபுணர் கூறுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |