Eggplant gravy: வீட்டில் கத்தரிக்காய் இருக்கா? மணக்க மணக்க கத்தரிக்காய் கார குழம்பு செய்து பாருங்க
சைவ உணவுகளை விட அசைவ உணவுகளில் தான் எல்லோரும் ஆர்வம் காட்டுவார்கள். இதற்கு காரணம் சுவை தான். அந்த வகையில் அசைவ உணவையே அடித்து துக்கும் அளவிற்கு கிராமத்து ஸ்டைலில் கத்தரிக்காய் காரக்குழம்பு எப்படி சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கத்தாரிக்காயில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உடல் எடையை கட்டுப்படத்த இந்த கத்தரிக்காய் ஒரு சிறந்த உணவாகும் கத்தரிக்காயை சாப்பிடும் போது நமது பசியும் அடங்கும் கலோரிகளும் குறைவாக இருக்கும்.
அந்த வகையில் இதில் மிகவும் சுவையான காரக்குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்களை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம் - 20 நறுக்கியது
- பிஞ்சி கத்திரிக்காய் - 8
- நல்லெண்ணை - 5 ஸ்பூன்
- கடுகு
- வெந்தயம்
- காஞ்ச மிளகாய்
- பூண்டு - 20
- பெருங்காய பொடி - கால் ஸ்பூன்
- மஞ்சள் - கால் ஸ்பூன்
- மிளகாய் பொடி
- தக்காளி- 2 அரைத்தது
- கறிவேப்பிலை - 2 கொத்து
- புளித்தண்ணீர்
- தண்ணீர்2 கப்
- உப்பு - தேவையான அளவு
- வெல்லம் - 1 ஸ்பூன்
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து முதலில் நல்லெண்ணை ஊற்றி கத்தரிக்காய்களை நான்கு பக்கமாக கீறி பொறித்து எடுக்க வேண்டும். பின்னர் அதே எண்ணெயில் கடுகு வெந்தயம் காஞ்ச மிளகாய் பூண்டு போட்டு பூண்டு சிவப்பு நிறம் வரும் வரை வதக்கி எடத்தக்கொள்ள வேண்டும்.
இதன் பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதன் பின்னர் இதே எண்ணெயில் மசாலாக்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த மசாலா நன்றாக கொறிந்து வர வேண்டும்.
இதன் பின்னர் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.இதன் பின்னர் தக்காளிளை அரைத்து இதில் சேர்க்க வேண்டும்.இது கொஞ்சம் வதங்கி வந்ததும் புளித்தண்ணீர் விட்டு கொஞ்சம் வதக்கி பின்னர் தண்ணீர் கொஞ்சமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இதில் தேவையான அளவு உப்பு வெல்லம் சேர்த்து பொறித்த கத்தரிக்காயும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்க வேண்டும். இதன்போது இதில் கொஞ்சம் பெருங்காயபொடி சோர்த்தால் சுவை பிரமாதமாக இருக்கும். இதை சூடான சாதத்தில் வைத்து குழந்தைகள் முதல் பெரியவர்க் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |