capsicum gravy: தொங்கும் தொப்பைக்கு தீர்வு கொடுக்கும் குடைமிளகாய் மசாலா குழம்பு...
பெதுவாகவே காய்கறிகள் மற்றும் பழங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியடையாதது என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிளுள் குடைமிளகாய் முக்கிய இடத்தை வகிக்கின்றது. அதில் வைட்டமின் 'சி' சத்து செரிந்து காணப்படுகன்றது.
மேலும் அதில் அடங்கியுள்ள வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும்.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும்.
குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட குடைமிளகாயை வைத்து அசத்தல் சுவையில் எவ்வாறு மசாலா குழம்பு செய்யவாம் என இந்த பதிவில் பார்க்கவாம்.
தேவையான பொருட்கள்
கேப்சிகம் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1(பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
முந்திரி - 2 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
கொத்தமல்லி தூள் - 1/2 தே.கரண்டி
கரம் மசாலா - 1/4 தே.கரண்டி
காய்ந்த கஸ்தூரி மேத்தி - 1/4 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - 1/2 கப்
சர்க்கரை - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
எண்ணெய் - 2 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் முந்திரியை வெந்நீரில் போட்டு 10 நிமிடங்கள் வரையில் ஊறவிட்டு அதனை பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளியை போட்டு நன்றாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கி, அதனுடன் தக்காளி விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா ஆகியவற்றை அதில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் முந்திரி விழுது, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து களறிவிட்டு மிதமான தீயில் வேகவிட வேண்டும்.
இறுதியாக குடைமிளகாய் துண்டுகளை சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் வதக்கி, காய்ந்த கஸ்தூரி மேத்தியை கையில் அரைத்து தூவி இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் குடைமிளகாய் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |