ஒரே ஒரு கத்தரிக்காய் மட்டும் போதும்! நாவூறும் துவையல் செய்யலாம்- எப்படின்ணு தெரியுமா?
எல்லா காலங்களில் கிடைக்கும் காய்களில் முக்கியமான கத்தரிக்காய், இதில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது.
நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கும் கத்தரிக்காயை பிஞ்சாக சாப்பிடுவது நல்லது.
முற்றிய கத்தரிக்காய்கள் அரிப்பை உண்டாக்கும் என்பதால் அதை தவிர்க்க வேண்டும்.
இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பைக் கரைப்பதால், உடல் பருமனைக் குறைக்கும்.
வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது.
இப்படி பல்வேறு நன்மைகள் கொண்ட கத்தரிக்காயில் குழம்பு, கூட்டு செய்து சாப்பிட்டிருப்போம், ஆனால் இதில் துவையல் செய்யலாம் என்று உங்களுக்கு தெரியுமா?
தேவையான பொருள்கள்
பெரிய கத்தரிக்காய் - 1
தேங்காய் துருவல் -1 கப்
துவரம் பருப்பு - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 6
பெருங்காயம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு -2 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை
முதலில் கத்தரிக்காயில் எண்ணெய் தடவி நெருப்பில் காட்டி தோலை உரித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், து. பருப்பு, சிறிது பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
பிறகு மிக்சியில் துருவிய தேங்காய், கத்தரிக்காய் மற்றும் வறுத்து வைத்த கலவை ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
கடைசியில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து தாளித்து அரைத்த துவையலில் சேர்த்தால் சுவையான கத்தரிக்காய் துவையல் தயார்.