சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றும் வாழைத்தண்டு...பொரியல் செஞ்சி கூட பயன்படுத்தலாம்!
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாழைத்தண்டு சாறினை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால், விரைவில் சிறுநீரகக் கற்கள் கரைந்து சிறுநீரின் வழியே வெளியேறிவிடும்.
வாழைத்தண்டு சாறில் லெமன் ஜூஸ் சேர்த்து குடித்து வந்தால், வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் மற்றும் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் இரண்டும் சேர்ந்து, பொட்டாசியம் சிட்ரேட்டாக மாறி கிட்னியில் கற்கள் உருவாகாமல் பாதுகாக்கும்.

வாழைத்தண்டு உடலில் சுரக்கின்ற இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுவதால் சர்க்கரை நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக உள்ளது.
வாழைத்தண்டை சமைத்து அல்லது சாறாக உணவில் தொடர்ந்து ஏதேனும் ஒரு வடிவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக் கழிவுகள் வெளியேறும்.
வாழைத்தண்டு பொரியல் செய்து கூட உணவில் பயன்படுத்தலாம். இனி வாழைத்தண்டு பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- வாழைத்தண்டு - 1
- கடுகு - 1 தே.கரண்டி
- கடலை பருப்பு - 2 தே.கரண்டி
- காய்ந்த மிளகாய் - 3
- கறிவேப்பிலை - சிறிதளவு
- வெங்காயம் - 2
- உப்பு - தே.அ
- துருவிய தேங்காய் - 1 கப்
செய்முறை
வாழைத்தண்டை நார் இல்லாமல் நன்கு சுத்தம் செய்துகொள்ளுங்கள். பின் குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி 2 விசில் வர வேக வைத்துக்கொள்ளுங்கள். பின் தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொறிந்ததும் கடலை பருப்பை போடுங்கள். சிவந்ததும் காய்ந்த மிளகாய் , வெங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். வதங்கியதும் வேக வைத்த வாழைத்தண்டை சேர்த்து கலந்துவிடுங்கள்.அதோடு உப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
5 நிமிடங்கள் கழித்து துருவிய தேங்காய் சேர்த்து பிரட்டி எடுத்து சில நிமிடங்கள் வெந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் வாழைத்தண்டு பொரியல் தயார்.