தினமும் பச்சை மிளகாயை அதிகம் சாப்பிட்டால் இவ்வளவு பக்க விளைவுகளா? தயவு செய்து இவர்கள் மட்டும் சாப்பிடவே வேண்டாம்!
பச்சை மிளகாய் காரமான உணவு வகைகளுக்கு சுவை சேர்க்கும் ஒரு முக்கியமான உணவுப்பொருள். அவற்றை சாப்பிடுவதால் நம் உடலில் என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம் வாருங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது முதல் உடல் எடை குறைப்புக்கு உதவுவது மற்றும் மலச்சிக்கலில் இருந்து விடுதலை அளிப்பது வரை இந்த பச்சை மிளகாய் அவ்வளவு நன்மைகளை வழங்குகிறது.
பச்சை மிளகாய் குறைந்த கலோரிகளை கொண்டது . எனவே இதை கொழுப்பு இல்லாத பொருளாக கூட நமது உணவில் சேர்த்து கொள்ளலாம். மேலும் அதில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. என்னதான் நன்மைகளை கொண்டாலும் அதிகம் சாப்பிட்டால் பக்க விளைவுகளும் உண்டு.
பக்க விளைவுகள் பச்சை மிளகாயை சாப்பிடுவதால் தீவிர எரிச்சல் உணர்வு உண்டாகும். அது வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்தும். சிலருக்கு வயிற்று வலி அல்லது வலியுடன் கூடிய வயிற்றுப்போக்கு ஏற்படும். உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால் அதை மேலும் அதிகப்படுத்தும். எனவே நீங்கள் பச்சை மிளகாயை தவிர்ப்பது நல்லது.
பச்சை மிளகாயில் கேப்சைசின் உள்ளது. நமது உடலில் இது அதிகமாக இருந்தால் தோல் ஒவ்வாமை ஏற்படும். இறுதியாக பச்சை மிளகாயை சாப்பிடுவதால் நிறைய பலன்கள் உண்டு. ஆனால் அதிகமாக சாப்பிட்டால் அது தீய விளைவை உண்டாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் அது மற்ற நோய்களிலிருந்து நம்மை தடுத்தாட்கொள்ளாது என்பதால் அதனை எவ்வளவு எடுத்து கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.