இந்த பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சியை தொடக் கூட கூடாது... மீறினால் என்ன நடக்கும் தெரியுமா?
இஞ்சியை அதிகமாக எடுத்து கொள்வதுபெரிய உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அதிகம் இஞ்சி சேர்த்து கொள்வதால் ஏற்படும் முக்கிய பாதகமான விளைவுகளை இங்கே பார்க்கலாம்.
நீரிழிவு நோயை ஓட ஓட விரட்ட இந்த ஒரு பொருள் போதும்...இரவு முழுக்க ஊற வைத்து வெறும் வயிற்றில் குடிங்க!
இதய பிரச்சனைகள் - இஞ்சியை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ளும் போது குறைந்த ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இது மாரடைப்புக்கும் வழிவகுக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் - கர்ப்ப காலத்தில் இஞ்சியை உட்கொள்வதை தவிர்க்கவும். இஞ்சி நுகர்வு கர்ப்ப காலத்தில் கடும் நெஞ்செரிச்சல் மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸை ஏற்படுத்தும். கருவிலிருக்கும் குழந்தைக்கு இஞ்சியின் விளைவுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அதை தவிர்ப்பது நல்லது.
இறந்ததாக புதைக்கப்பட்ட திருடன் உயிருடன் வந்த அதிசயம் - நடந்தது என்ன?
நீரிழிவு - அதிகமாக இஞ்சியை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். உடலில் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடும். அதிக இஞ்சி பயன்படுத்துவது இன்சுலின் அளவை பாதிக்கும்.
நோயாளிகள் பயன்படுத்தும் சில நீரிழிவு மருந்துகளுடன் வினை புரிந்து ரத்தச் சர்க்கரைக் குறைவை ஏற்படுத்த கூடும். எனவே நீரிழிவு நோயாளிகள் இஞ்சியை எடுத்து கொள்ளும் முன், எப்போதும் மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது.
மீன் குழம்பை சாப்பிட்டு குடும்பமே மருத்துவனையில் அனுமதி - பரபரப்பு சம்பவம்!
வயிற்று கோளாறு - இஞ்சி பித்த உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஆனால் வயிறு காலியாக உள்ள போது இது அதிகப்படியான இரைப்பை தூண்டுதலுக்கு வழிவகுக்கலாம். இதனால் செரிமானக் கோளாறு, எரிச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
தோல் மற்றும் கண் அலர்ஜி - சில நேரங்களில் அதிக இஞ்சி நுகர்வு, அலர்ஜிகளை ஏற்படுத்தும்.
தோலில் தடிப்புகள், கண் சிவத்தல், மூச்சுத் திணறல், அரிப்பு, உதடு வீக்கம், கண்களில் அரிப்பு மற்றும் தொண்டையில் அசௌகரிய உணர்வு உள்ளிட்ட சில பொதுவான அலர்ஜிகள் ஏற்படலாம்.