நீரிழிவு நோயை ஓட ஓட விரட்ட இந்த ஒரு பொருள் போதும்...இரவு முழுக்க ஊற வைத்து வெறும் வயிற்றில் குடிங்க!
இலவங்கப்பட்டை கொழுப்பை கரைத்து உடல் எடையைக் குறைப்பது முதல் நீரிழிவைக் கட்டுக்குள் வைப்பது வரை நிறைய ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இலவங்கப்பட்டை தினசரி உணவில் முறையாகப் பயன்படுத்தினால் நீரிழிவு கட்டுக்குள்ளேயே இருக்கும்.
இலவங்கப்பட்டை அதிக அளவில் ஆன்டி - பயாடிக் பண்புகள் மற்றும் ஆன்டி - இன்பிளமேட்டரி பண்புகளைக் கொண்டிருக்கின்றன.
தொப்பை வராமல் இருக்க முன்னோர்கள் அருந்திய பானம்! எப்படி தயார் செய்வது?
இதிலுள்ள அதிக அளவிலான ஆண்டி - ஆக்சிடண்ட்டுகள் உடலின் ஜீரண சக்தியைத் தூண்டுகிறது.
மெட்டபாலிசத்தின் வேகம் அதிகரிப்பதால் உடலில் உள்ள கழிவுகள் முறையாக வெளியேற்றப்படுகின்றன.
மேலும் மெட்டபாலிசத்தை தடுக்கிற இன்சோம்னியா என்னும் தூக்கமின்மையை சரிசெய்வதால், கணையம் இன்சுலினை முறையாக சுரக்கச் செய்கிறது.
இதனால் இயல்பாகவே ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
ஆய்வில் வெளிவந்த தகவல்
Accelerating the world's research என்னும் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றின் முடிவில் நீரிழிவுப் பிரச்சினைக்கு எதிராக இலவங்கப்பட்டை செயல்படுகிறது என்றும் தினமும் ஒரு கிராம் அளவுக்கு லவங்கப்பட்டையை சேர்த்துக் கொண்டே வரும்போது டைப் 2 நீரிழிவும் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
அதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இலவங்கப்பட்டை குடிநீர்
இலவங்கப்பட்டையை உணவில் பல்வேறு வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக் கொள்வது அதிக பலன்களைத் தரும்.
அதை எப்படி தயாரிக்கலாம் என்று இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
- தண்ணீர் - 2 கப்
- இலவங்கப்பட்டை - 1 இன்ச் அளவு
செய்முறை
2 கப் தண்ணீரில் ஒரு இன்ச் அளவு இலவங்கபட்டையை போட்டு, இரவு முழுக்க நன்கு ஊற வைக்க வேண்டும்.
காலையில் நன்கு ஊறியதும் அந்த தண்ணீரை பட்டையோடு சேர்த்து நன்கு கொதிக்க வேண்டும்.
பாம்புகளுக்கு இடையே நடக்கும் இட தகராறு! சலிக்காமல் சண்டையிடும் காட்சி
அது ஒரு கப் ஆகும்வரை சுண்ட வைத்துப் பின் வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பாக குடிக்க வேண்டும்.