கசப்பே இல்லாமல் பாகற்க்காயில் ஐஸ்கிரீம் செய்வது எப்படி? ஒரு முறை இந்த ரெசிபி பாருங்க
கசப்பு சுவைக்காக பாகற்காயை எல்லோரும் ஒதுக்குவார்கள். இது ஏன் குழந்தைகள் இதை கிட்ட கூட எடுக்க மாட்டார்கள். ஆனால் இந்த பாகற்காயில் ஐஸ்கீரிம் செய்யலாம் என்பது யாருக்கும் தெரிவதில்லை.
இந்த ரெசிபி உங்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் இது தான் உண்மை. பாகற்க்காயில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. அதிலும் சர்க்கரை நோயாளிகளின் நண்பன் என்றால் அது பாவக்காய்தான்.
எனவே ஐஸ்கிரீமே இனி சாப்பிட முடியாது என வருந்தும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பாகற்க்காய் ஐஸ்கிரீம் ஒரு வரமாக இருக்கும் என நம்புகிறோம். இந்த ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாகற்க்காய் – 2
- டூட்டி ஃப்ரூட்டி – 2 ஸ்பூன்
- உப்பு – சிறிதளவு
- பால் – ஒரு கப்
- ஃபிரஷ் கிரீம் – ஒரு கப்
- பால் பவுடர் – ஒரு கப்
- கண்டன்ஸ்ட் மில்க் – அரை கப்
செய்முறை
முதலில் பாகற்க்காயை அதன் விதைகளை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவேண்டும். இது நன்றாக சுத்தம் செய்யப்பட்டிருப்பது அவசியம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, அதில் பாகற்க்காயை சேர்த்து வேகவைத்து தனியே எடுத்துக்கொள்ளவேண்டும்.
மேலே கூறப்பட்ட முறைப்படி நான்கு தடவை செய்வது அவசியம். அப்போது தான் பாகற்காயில் இருக்கும் கசப்பு முற்றாக இறங்கும்.
இதன் பின்னர் அவித்த பாகற்க்காயை எடுத்து ஆறவைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் ஒரு மிக்ஸியில் பால், ஃபிரஷ் கிரீம் மற்றும் பால் பவுடர் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து கண்டன்ஸ்ட் மில்க் மற்றும் பாவக்காயை சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவேண்டும்.
இதன் பின்னர் உங்களுக்கு எந்த பாத்திரத்தில் ஐஸ்கிரீம் செய்ய விரும்புகிறீர்களோ அதில் இதை சேர்த்து 8 மணி நேரம் ஃப்ரீஸ் செய்து எடுத்தால் போதும். இப்போது சுவையான பாவக்காய் ஐஸ்கிரீம் தயார்.
அதில் டூட்டி ஃப்ரூட்டிக்களை தூவி பரிமாற சுவை அள்ளும். இது கட்டாயம் உங்களுக்கு பிடித்திருக்கும் ஒரு முறையாவது முயற்ச்சித்து பாருங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
