16 அடி நீளமுள்ள ராட்சத மீன்! சுனாமி வந்துவிடுமோ? பதற்றத்தில் மக்கள்
16 அடி நீளமுள்ள ராட்சத மீனை பிடித்தும் உள்ளூர் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
சிலி நாட்டில் உள்ள அரிகா பகுதியை சேர்ந்த மீனவர்கள் சில நாட்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
அப்போது வலைவீசிவிட்டு காத்திருந்தபோது ஏதோ பிரம்மாண்டமாக வலையில் சிக்கியதை அவர்கள் கண்டுள்ளனர்.
இதன் பின் உள்ளே சிக்கிய மீனை வெளியே எடுக்க அவர்கள் முயற்சிக்க அப்போது தான் அதிர்ச்சியே காத்திருந்துள்ளது. காரணம் 16 அடி நீளம் கொண்ட ராட்சத மீன் சிக்கியுள்ளது.
அதை பத்திரமாக கரைக்கு கொண்டு வந்துள்ளனர். அதிர்ச்சியில் உறைந்த மக்கள் இந்த மீனை ஹெர்ரிங்ஸ் ராஜா எனவும் அழைக்கின்றனர்.
இது உண்மையிலேயே ஓர் வகை மீன் தான் அதீத நீளம் காரணமாக அங்குள்ள இயந்திரத்தின் துணையுடன் இந்த மீன் தூக்கப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
பொதுவாகவே ஆழ்கடல் பகுதியில் வசிக்கும் இந்த வகை மீன்கள் வெப்பமண்டல கடல்களில் அதிகம் காணப்படுகிறது. மேலும் தென் அமெரிக்காவில் இந்த வகை மீன்கள் வலையில், சிக்குவதை அங்குள்ள மக்கள் விரும்புவதில்லை.
ஏனென்றால் இந்த மீனை கெட்ட சகுனமாக கருதுகிறார்கள் உள்ளூர் மக்கள். ஏனென்றால் இந்த மீன் பிடிபட்டால், சுனாமி, நிலநடுக்கம் ஆகியவை ஏற்படும் என இந்த மக்கள் நம்புகிறார்கள்.
இதற்கு உதாரணமாக ஜப்பானில் கடந்த 2011 ஆம் ஆண்டு, ஏராளமான ஓர் வகை மீன்கள் உள்ளூர் மீனவர்களால் பிடிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்தே புகுஷிமா-வில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அந்த மக்கள் கருதுகின்றனர்.
இருந்தாலும், இவற்றுக்கு அறிவியல் ரீதியாக எவ்வித சான்றுகளும் இல்லை என்கிறார்கள்.