3 வருடத்திற்கு பின் மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை மீன் - வியந்துபோன மக்கள்!
3 ஆண்டுக்கு பின் பாம்பன் விசைப்படகு மீனவர் வலையில் அரிய வகை மீன் ஒன்று சிக்கி உள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பாம்பன் தென்கடல் பகுதியில் சுமார் 100 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் கரை திரும்பிய போது, மீனவர்களின் வலையில், அரிய வகை மீனான சூரிய மீன் ஒன்று சிக்கி உள்ளது.
அந்த மீனின் வால் பகுதியான துடுப்பு பகுதி உருமாறி இருந்ததால், இந்த மீனை பாம்பன் மக்கள் நேற்று ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர். சுமார் 60 கிலோ வரை எடை கொண்ட அரிய வகை சூரிய மீனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
இந்த வகையான சூரிய மீன்கள் ஜப்பான், கொரியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த சூரிய வகை மீன்கள் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நமது நாட்டில் உள்ள கடல் பகுதியில் எப்போதாவது தான் மீனவர்கள் வலையில் சிக்கும். முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு பாம்பன் மீனவர்கள் வலையில் சூரிய மீன்கள் சிக்கி இருந்தன.
மேலும், சூரிய மீன், சுமார் 60 கிலோ வரை எடை கொண்டாலும், மொத்தமாக இந்த சூரிய மீன்கள், சுமார் 3000 கிலோ எடை வரை வளரும் தன்மையும் கொண்டதாகும்.