இதய நோயாளிகள் மீன் தலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?... இனி தெரிஞ்சிட்டு சாப்பிடுங்க!
மீன் ஒரு ஆரோக்கியமான உணவு.
தவறாமல் மீனை வாரம் ஒருமுறை சேர்த்துக் கொள்ளுவதால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
அதில் முக்கியமான ஓர் சத்து தான் ஒமேகா-3 கொழுப்பு அமிலம்.
நீரிழிவு நோயை நெருங்க விடாது தடுக்கும் சக்திவாய்ந்த கீரை….ஒரு ரூபாய் கூட செலவே இல்லாமல் மருந்து!
இந்த கொழுப்பு அமிலம் மற்ற உணவுப் பொருட்களில் இருந்தாலும் மீன்களில் வளமாக நிறைந்துள்ளது.
மீன் தலையை இனி வீசாதீர்கள்
சிலர் மீன் சாப்பிடும் போது அதன் சதைப் பகுதிகளை மட்டும் சாப்பிட்டு, அதன் தலையைத் தூக்கி போட்டுவிடுவார்கள்.
சொல்லப்போனால் மீன்களின் தலை மற்றும் கண்களில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதைத் தூக்கி எறிந்துவிட்டு மீன்களை சாப்பிடுவதில் என்ன இருக்கிறது. ஆகவே உங்களுக்கு மீன்களில் இருந்து முழு நன்மைகளையும் பெற வேண்டுமானால், அதன் தலையைத் தூக்கி போடாதீர்கள்.
சோம்பு தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாமா? தினமும் குடித்தால் என்னென்ன நடக்கும் தெரியுமா?
மீன் தலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- தலைப்பகுதியில் பலவகையான வைட்டமின்கள், தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.
- ஆரோக்கியமான புரதம் அதிக அளவில் மீனின் தலைப்பகுதியில் இருக்கிறது.
- மற்ற இறைச்சி வகைகளை விட மீனின் தலையில் செறிவூட்டப்பட்ட கொழுப்பு மிகவும் குறைவாக இருக்கிறது.
- ஆதலால் மீன் தலையை சாப்பிட்டு வந்தால் கொழுப்பு அதிகரிக்காது. மீன் தலையை உட்கொண்டு வந்தால் பக்கவாதம், மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறையும்.
- மீனின் மற்ற பகுதிகளை விட தலைப்பகுதியில்தான் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது.
- ஒமேகா அமிலம் இதய நோய்களில் இருந்து காக்கும்தன்மை கொண்டது.
- ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் கொண்ட உணவு வகைகளை சாப்பிடுபவர்களுக்கு கொழுப்பு அளவு குறைவதாகவும், இதயதுடிப்பு சீரடைவதாகவும் பெரும்பாலான ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
- மேலும் மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற மன நோய்களில் இருந்தும் அது பாதுகாக்கிறது.
- மீனின் தலைப்பகுதியில் வைட்டமின்-ஏ அதிகம் நிறைந்திருக்கிறது. அது கண்கள் மற்றும் மூளைக்கு நல்லது. வைட்டமின்-ஏ, கண் பார்வை திறனை அதிகரிக்கச் செய்யும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம் படுத்தவும் செய்யும்.
- மீனின் தலையில் உள்ளடங்கியிருக்கும் ஊட்டச்சத்துக்கள் மூட்டுவலி, நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க செய்யும்.
இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியம் வேண்டாம்! ஆபத்தான நோயாம்
முக்கிய குறிப்பு
எனவே இனி மீன் வாங்கினால் மீன் தலையையும் கேட்டு வாங்கி அதன் முழு பலன்களையும் பெற்று கொள்ளுங்கள்.