டேஸ்டியான மொறு மொறு மீன் வறுவல்.. ஓட்டல் சுவையில் செய்வது எப்படி?
வழக்கமாக வீடுகளில் சைவ உணவுகளை விட, அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றது.
அதிலும், மீன் வறுவல் என்றால் பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். நமது வீடுகளில் வாரத்திற்கு ஒரு நாளாவது மீன் வறுவல் செய்து விடுவார்கள்.
மீன் வறுவல் செய்யும் திட்டம் இருந்தால் மற்ற மீன்களை விட விரால் மீன் சிறந்தது. அப்படி தாறுமாறாக சுவை கொண்ட விரால் மீன் வறுவல் அனைவருக்கும் பிடிக்கும்.
அந்த வகையில், காரசாரமான விரால் மீன் வறுவல் எப்படி செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- விரால் மீன் ( தேவையான அளவு)
- மிளகாய் தூள்- 3 டீ ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
- தக்காளி - 1 ( நன்றாக பழுத்தது )
- இஞ்சி ( தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் )
- பூண்டு - 10 பல்
செய்முறை
முதலில் விரால் மீன்களை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு கல் போட்டு நன்றாக கழுவ வேண்டும். அதன் பின்னர், வறுவலுக்கு தேவையான அளவில் வெட்டிக் கொள்ளவும்.
அடுத்து, மிளகாய் தூள், மிளகு, உப்பு, சீரகம், பூண்டு, தக்காளி ஆகிய பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். மசாலாவின் புளிப்பு தன்மைக்காக எலுமிச்சை சாறு அல்லது தக்காளி கொஞ்சம் அதிகமாக சேர்க்கலாம்.
இந்த சுவை மீனின் சுவையுடன் கலந்தால் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். அரைத்த மசாலாவை மீன் மீது நன்றாக தடவி, அதனை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பார்க்கும் பொழுது மீன் சிவப்பாக இருக்க வேண்டும் என்றால் சிறிதளவு காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்க்கலாம். இந்த வேலைகள் முடிந்தவுடன், ஒரு கடாயில் நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் ஊற்றி, மசாலா தடவி வைத்திருக்கும் மீனை எண்ணெய் போட்டு பொரித்தெடுக்கவும்.
இந்த காரசாரமான விரால் மீன் வறுவல் உடன் சூடான சாதம், சாம்பார் மற்றும் ரசம் இருந்தால் சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |