சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் என்ன செய்கின்றனர்? வெளியானது முதல் காணொளி
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்க பாதை இடிபாடுகளில் சிக்கி 10 நாட்களாக தத்தளிக்கும் 41 பேர் நிலைமை தற்போது காணொளியாக வெளியாகியுள்ளது.
சுரங்க பாதையில் சிக்கிய 41 தொழிலாளிகள்
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா என்ற இடத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இதில் சில்க்யாரா தண்டல்கான இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்ற போது, கடந்த 12ம் தேதி திடீரென மண் சரிவு ஏற்பட்டு, 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
சுரங்கப் பாதைக்குள் சுமார் 1.5 கி.மீ. தொலைவு மட்டுமே 41 தொழிலாளர்கள் நடமாட முடியும் என்ற நிலையில், குறித்த தொழிலாளர்களை மீட்க மீட்புக்குழுவினர் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
சிவப்பு கம்பள வரவேற்புடன் உள்ளே நுழையும் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! பிரதீப்பை நினைத்து கதிகலங்கிய பிக் பாஸ் வீடு
குழாய் வழியாக தொழிலாளர்களுக்கு உணவு, ஆக்ஸிஜன் வழங்கி வரும் நிலையில், தற்போது 41 பேரின் நிலை என்ன என்பதை எண்டோஸ்கோபி கமெரா வைத்து காட்சி படுத்தப்பட்டுள்ளது.
இதில் 41 பேரும் பாதுகாப்பாக இருப்பதுடன், சிலர் வாக்கி டாக்கி உதவியுடன் மீட்பு குழுவினரிடம் பேசுவதும் காட்சியில் வெளியாகியுள்ளது. 10 நாட்களாக சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களின் முதல் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |