எப்பவும் உடம்பு சோர்வாவே இருக்கா? அப்போ இந்த நோய் ஆபத்து இருக்கும்- ஜாக்கிரதை
இன்று பலருக்கு இருக்கும் பிரச்சினைகளில் உடல் சோர்வு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
சிலர் வேலைக்கு சென்று வந்த பின்னர் நீண்ட நேரம் ஓய்வெடுப்பார்கள். இதனால் சந்திக்கும் உடல் சோர்விற்கு போதுமான ஒய்வை எடுத்தால், உடல் புத்துணர்ச்சி அடைந்துவிடும்.
மாறாக எந்த வேலையும் செய்யாமல், நல்ல போதுமான ஓய்வை எடுத்தும், ஒருவர் மிகுந்த உடல் சோர்வுடன் இருக்கிறார் என்றால் அதற்கான முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடாகும்.
மனித உடல் சீராக செயல்பட வேண்டுமானால், அதற்கு போதுமான ஊட்டசத்துக்கள் இருக்க வேண்டும். இது உடலில் குறையும் பட்சத்தில், உடலின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, மிகுந்த உடல் சோர்வு, மந்த நிலை மற்றும் கவனம் செலுத்த முடியாமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க வேண்டியிருக்கும்.
அந்த வகையில் உடல் சோர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு பற்றி தொடரந்து பதிவில் பார்க்கலாம்.
1. இரும்புச்சத்து குறைபாடு
மனிதர்களின் உடலில் ஆக்ஸிஜன் (Oxygen) இரும்புச்சத்தின் மூலம் தான் உடல் முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றது. அதுவே உடலில் குறைவாக காணப்படும் போது இரத்த சிவப்பணுக்களால் தசைகள் மற்றும் திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜனை கொண்டு செல்ல முடியாது. இதன் காரணமாக தான் உடல் சோர்வு மற்றும் பலவீனமாக உணர்கின்றது. இரும்புச்சத்து குறைபாடு பிரச்சினையால் அதிகமாக பெண்கள் தான் பாதிக்கப்படுவார்கள். இதனால் அவர்களுக்கு அடிக்கடி மிகுந்த உடல் சோர்வு, தலைவலி, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.
2. வைட்டமின் டி குறைபாடு
மனிதர்களின் ஆற்றல் முதல் மனநிலை சமநிலை வரை அனைத்திலும் வைட்டமின்களின் பங்கு உள்ளது. அதில் வைட்டமின் டி போதுமான அளவு உடலில் இல்லாத போது மிகுந்த சோம்பல், சோர்வு ஆகிய பிரச்சினைகள் ஏற்படும். காலையில் கிடைக்கும் சூரிய ஒளியில் இதனை நாம் பெற்றுக் கொள்ளலாம். சூரிய ஒளி சருமத்தில் படாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பவர்களுக்கு அதிகமாக வைட்டமின் டி குறைபாடு பிரச்சினை இருக்கும்.
3. வைட்டமின் பி12 குறைபாடு
இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி மற்றும் நரம்பு செயல்பாடு ஆகிய முக்கிய வேலைகளை வைட்டமின் பி12 செய்கின்றது. இது உடலில் குறையும் போது மனநிலை மாற்றங்கள், நினைவாற்றல் பிரச்சனைகள், மிகுந்த உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வைட்டமின் பி12 இறைச்சிகளில் அதிகம் உள்ளன. எனவே வைட்டமின் பி12 குறைபாடு பிரச்சினையுள்ளவர்கள் அசை உணவுகள் மற்றும் பால் பொருட்கள் அடிக்கடி எடுத்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |